புது தில்லி: கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையற்றுகிறார்.
உலகையே அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 70 ஆயிரத்தை எட்டிவிட்டது. பலி எண்ணிக்கை 2,200 ஆக உள்ளது.
ஏற்கனவே நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17 வரை ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமலில் இருக்கும் நிலையில், கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதனை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார்.