கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் தொழிலாளர்கள் வேலை மற்றும் வருமானங்கள் இன்றி உள்ளனர் இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிவாரண உதவித்தொகை அறிவித்தது முதல் கட்டமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது இந்த நிலையில் இரண்டாவது முறையாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் வகையில் 83 கோடியே 99 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது இது தொடர்பாக வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில் அதன் இந்த அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் இரண்டாவது முறையாக வழங்கப்பட உள்ளது .
15 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மொத்தம் 8 லட்சத்து 39 ஆயிரத்து 950 தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் 83 கோடியே 99 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் முடிதிருத்தும் தொழிலை மேற்கொள்ள மத்திய அரசின் வழிமுறைகள் இடம் அளிக்காததால் நலவாரியத்தில் பதிவு செய்ய அவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி தமிழ்நாடு அரசுஅரசு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் முடித்ததும் தொழிலாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முடிதிருத்துவோர் நலவாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கும் இதன் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதை போன்ற நிவாரண தொகை வழங்க முடிவு செய்துள்ளது.
முடி திருத்துவோர் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத தொழிலாளர்கள் கிராமப்புறங்களில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களும், பேரூராட்சி பகுதிகளில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் கடைகள் இருக்கும் இடத்தில் மண்டல அலுவலர்களிடமும் மனுவாக சமர்ப்பிக்க வேண்டும். அம்மனுவை ஆய்வு செய்து தகுதியான மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்யவேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வருவாய் நிர்வாக ஆணையர் வழங்குவார் என தமிழக அரசு சார்ந்து செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
மீண்டும் 15 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூபாய். 1000 நிவாரணம் தமிழக அரசு அறிவிப்பு!!
By
Posted on