மாஸ்டர் படத்தின் பணிகள் குறித்தும், வெளியீடு குறித்தும் மாஸ் அப்டேட் தெரிவித்த அனிருத்!
கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்றால் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது.
ஊரடங்கு பிறப்பித்ததால் படக்குழு தேதியை தள்ளிப்போட்டு விட்டது. ஆனால் படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் என்று சொல்லலாம். படத்தை தீபாவளிக்கு திரையிலிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் குறித்து மாஸ் தகவலை அனிருத் கூறியுள்ளார்.
வீட்டிலே இசைக்கருவிகள் இருப்பதால் படத்தின் பின்னணி இசை வேலைகளை வீட்டிலிருந்து தயார் செய்து கொண்டிருக்கிறேன். படத்தின் இறுதி கட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. “பட ரிலீஸ் ஆவது எவ்வளவு சீக்கிரம் வருமோ அவ்வளவு சீக்கிரம் வரட்டும்” என அனைவரும் காத்திருக்கிறோம் என்று அனிருத் கூறியுள்ளார்.
மாஸ்டர் படத்தின் பணிகள் குறித்தும், வெளியீடு குறித்தும் மாஸ் அப்டேட் தெரிவித்த அனிருத்!
By
Posted on