மின் கட்டணம் செலுத்த, வரும், ஜூன் 15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தாழ்வழுத்த மின் நுகர்வோர், மின்கட்டணம், இதர நிலுவைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம், ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தாழ்வழுத்த தொழிற்சாலை, வணிக மின் நுகர்வோர், தங்கள் மின் கட்டணத்தை, முந்தைய மாத கணக்கீட்டின்படி (அல்லது) மின் அளவியில் உள்ள நுகர்வுக்கேற்ப, கட்டணம் செலுத்தலாம். எங்கெல்லாம் முந்தைய மாத தொகையின்படி கணக்கீடு செய்யப்பட்டதோ, அவர்களுக்கு, மின் கணக்கீடு, இரண்டு இரு மாத மின்அளவீடு மேற்கொள்ளப்படும். அதற்கான தொகையில், முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி, செலுத்தப்பட்ட தொகை சரிசெய்யப்படும். இணையதள வழி, வலைதள வங்கியியல், கைபேசி வங்கியியல், பேமண்ட் கேட்வே, பிபிபிஎஸ்., மூலம், பணம் செலுத்தி, மின் கட்டண ‘கவுன்டர்’களுக்கு வருவதை தவிர்க்கவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்
மின் கட்டணம் ஜூன் 15-ல் கட்ட வேண்டும் இல்லை என்றால் அபராதம் தமிழக அரசு அறிவிப்பு
By
Posted on