சிதம்பரம் நடராஜ கோயில் கோபுரத்தில் உள்ள நடராஜர் சிலை மீது மழை பெய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. பூலோகத்தின் கைலாயம் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜ கோயில் கோபுரத்தில் உள்ள நடராஜர் சிலை மீது மட்டும் மழை பொழியும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.