மின் வாரியத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப என்ற கோரிக்கையானது இருந்து வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், மின் வாரியத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்பப்படும் என செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ” மின் வாரியத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப ஜனவரி மாதம் முதல் நடவடிக்கை எடுக்கப்படும்.
நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்தவுடன் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் ” என தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி.