தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அரசு இலவசமாக ஆன்லைன் மூலம் பயிற்சி அதில் எப்படி இணைவது என்பதை பார்க்கலாம்.
தமிழக அரசு கோவில்களில் வேலைவாய்ப்பு
தமிழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் பெரும்பாலானோர் அரசாங்கம் நடத்தும் போட்டித் தேர்வின் மூலம் ஏதாவது ஒரு அரசு வேலையை பெற்று விடலாம் என்று எண்ணுபவர்கள் ஏராளம். இந்நிலையில் இந்த இக்கட்டான காலத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பயற்சி அளிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்த பயிற்சி வகுப்புகளை வேலைவாய்ப்புத்துறை மூலமாக அனைத்தும் நேரடியாக நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தொற்று காரணமாக எந்த ஒரு பயிற்சி வகுப்புகளும் மேற்கொள்ள முடியாத நிலையில் தற்போது இணைய வழி பயிற்சி வகுப்புகளை வேலைவாய்ப்புத்துறை நடத்த திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த பயிற்சி வகுப்பில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் இந்த வகுப்பிற்கு என்று தனியாக கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்றும் அறிவித்துள்ளது.
வகுப்பின் விவரங்கள்:
இந்த பயற்சி வகுப்புகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் 4 மணி வரையிலும் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளில் CISCO WEBEX இணைய பக்கத்தின் மூலமாகவோ அல்லது CISCO App மூலமாகவோ கலந்துக் கொள்ளலாம். இந்த பயிற்சியில் அணைத்து விதமான பாடக்குறிப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் அதுமட்டுமின்றி அரசு அலுவலர்களைக் கொண்டு உங்களுக்காண மாதிரி நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்படும். இந்த பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் இந்த https://tamilnaducareerservices.tn.gov.in/vle/vle_home இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்துக் கொள்ளலாம்.
மேலும் இந்த இணையதள பக்கத்தில், போட்டித் தேர்வுகளுக்கு உரிய பாட குறிப்புகள், முந்தைய ஆண்டு வினாக்கள் போன்ற அனைத்தும் கொண்டு பயற்சி வழங்கப்படும். தேர்வர்கள் இதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பயிற்சியில் பங்கு பெற QR Code மற்றும் மேலும் தகவல்களுக்கு வாட்ஸ் அப் குரூப் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது QR Code வெளியிடப்பட்டுள்ளது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள போட்டித் தேர்வுக்கு தயாராகும் நபர்கள் இந்த அரிய வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.