தமிழ்நாட்டில் 3 லட்சத்துக்கு மேல் அரசு காலிப் பணியிடங்கள் உள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய அவர், தமிழ்நாட்டில் 3 லட்சத்துக்கும் மேல் அரசு காலிப்பணியிடங்கள் உள்ளது. இதனை சரி செய்யும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எவ்வாறு நடத்துவது, தேர்வுக்கான பயிற்சி எவ்வாறு வழங்குவது தேர்வு முறையில் உள்ள குளறுபடிகளை எவ்வாறு சரி செய்வது என்பது தொடர்பாக ஆய்வு செய்ய தனி நிபுனர் குழு தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 3 லட்சத்துக்கும் மேல் உள்ள அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக நிபுணர் குழு அதற்கான ஆய்வினை தற்போது செய்து வருகிறது இந்த குழு 6மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு தேர்வு முறை மற்றும் அரசு வேலைவாய்ப்பில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
வரும் ஆண்டுகளில் அரசு பணிக்கான காலியிடங்கள் அதிகமாக இருக்கும் என்று நிதியமைச்சர் கூறியிருப்பது டி.என்.பி.எஸ்.சி மற்றும் அரசு பணிக்கு படிக்கும் மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.