கைவினை கலைஞர்களுக்கு ‘ஜாக்பாட்’.. 25 வகையான தொழில்களுக்கு கடன் உதவி.. தமிழக அரசு அழைப்பு!
கைவினைக் கலைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திட “கலைஞர் கைவினைத் திட்டம்” திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியான அரசாணை அறிக்கையில், “கைவினைக் கலைஞர்களைத் தொழில்முனைவோர்களாக உயர்த்திட “கலைஞர் கைவினைத் திட்டம்” திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார். சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், கைவினைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி கலைஞர் கைவினைத்திட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
#governmentfreescheme #subsidy