Service

அசல் பத்திரம்.. ஆவணம் தொலைந்தாலும் பத்திரப்பதிவு.. நீதிமன்றத்துக்கு பெயிரா நன்றி.. அரசுக்கு கோரிக்கை

சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வரவேற்று மனம் திறந்து பாராட்டியும், நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்தும் அறிக்கை ஒன்றை பெயிரா வெளியிட்டிருக்கிறது. அத்துடன், பொதுமக்களின் நலன் கருதி, தமிழக பதிவுத்துறைக்கு நினைவூட்டல் கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி விடுத்துள்ள அந்த அறிக்கையில், “தமிழகத்தில் சொத்துக்களை வாங்குகின்ற மற்றும் விற்கின்ற பொதுமக்களிடம் பதிவுத்துறை சார்பில் அது குறித்து முந்தைய அசல் தாய்பத்திரம் கேட்டு அதன் அடிப்படையில் பதிவு செய்து வந்தனர்.

தவறவிட்ட ஆவணங்கள்
இதில் பல பொதுமக்கள் தங்கள் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்களை தவறவிட்ட நிலையில், அவர்களின் சொத்துக்களை அசல் ஆவணங்கள் இல்லாமல் விற்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு கூட தங்கள் பெயரில் சொத்துக்கள் இருந்தும் அவற்றினை விற்று பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வந்தனர்.

இப்படி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவர்களின் சொத்துக்களை விற்பதற்கு பதிவு அலுவலகங்களை அணுகிய போது, பதிவாளர்கள் அசல் ஆவணங்கள் இல்லாமல் தங்களின் ஆவணங்கள் பதிவு செய்ய இயலாது என்று நிராகரித்து திருப்பி அனுப்பி விட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பதிவுத்துறையால் பதிவு அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பொது ஆவணங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் பத்திரப்பதிவு மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண் W.P.NO..242/2024 & W.A.NO. 1160/2024 ஆக பதிவுத்துறைக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். மேற்கண்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பதிவு துறையால் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிற பொது ஆவணங்களின் அடிப்படையில் ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும், மாறாக பதிவு பணியை மேற்கொள்ள வரும் பொதுமக்களிடம் அவர்கள் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்களை கேட்கக்கூடாது என உத்தரவிட்டது.

நடைமுறைப்படுத்திய பத்திரப்பதிவு
மேற்கண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பதிவுத் துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் வழக்கு எண் SLA.2344/2025ல் உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையே பதிவுத்துறை நடைமுறைப்படுத்திட வேண்டுமென உறுதிசெய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மேற்கண்ட உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் துணை நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் அசல் ஆவணங்கள் இன்றி பத்திரப்பதிவு செய்யலாம் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அமல்படுத்த வேண்டும் என்று பதிவுத்துறை கூடுதல் துணைத் தலைவர் கடித எண்:44420/C1/2024,Dt.05.02.2025 வாயிலாக உத்தரவினை பிறப்பித்து அனைத்து மண்டல துணை அலுவலர்களுக்கும், மாவட்ட பதிவாளர்களுக்கும், சார்பதிவாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

சொத்துக்கள் விற்பனை – ஆவணங்கள் பதிவு
மேற்கண்ட உச்சநீதிமன்றம் மற்றும் நீதிமன்றங்களின் உத்தரவு மற்றும் அதன் அடிப்படையில் பதிவு துறை கூடுதல் தலைவர் அவர்களின் கடிதம் மூலம் இனி தமிழகத்தில் சொத்துக்களை வாங்கி வைத்துள்ள பொதுமக்கள் அதனை விற்பதற்கு அசல் ஆவணங்களை பதிவு அலுவலகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை என்கிற நிலை உருவாகியுள்ளது.

இந்த மக்கள் நலன் சார்ந்த வரலாற்று சிறப்புமிக்க உத்தரவினை பெயிரா கூட்டமைப்பின் தேசிய தலைவர் டாக்டர்.ஆ.ஹென்றி மனம் திறந்து, நீதிமன்ற உத்தரவை பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

பதிவுத்துறைக்கு நினைவூட்டல் கோரிக்கை
இதனிடையே, பதிவுத்துறைக்கு பெயிரா மீண்டும் நினைவூட்டல் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், “அசல் ஆவணங்கள் இன்றி சொத்துக்களை பதிவு செய்யலாம் என்கின்ற உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவினாலும் மற்றும் பதிவுத் துறை கூடுதல் துணைத் தலைவர் அவர்களின் கடித எண்: 44420/C1/2024 இன் அடிப்படையிலும், அசல் ஆவணங்கள் பொதுமக்களிடம் இல்லை என்றாலும் பதிவுத்துறையினால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பொது ஆவணத்தின் (PUBLIC DOCUMENT) அடிப்படையில் பதிவு செய்யலாம் என்கின்ற அடிப்படையிலும் பொதுமக்கள் நிம்மதி அடைந்திருந்தனர்.

தடுக்கப்படும் பதிவுத்துறை வருவாய்
ஆனால், பதிவுத் துறை தலைவர், வெளியிட்டுள்ள அசல் ஆவணத்தை ஒளி வருடல் செய்வது சம்பந்தமான சுற்றறிக்கை எண்: 2492 l CA1 / 2024 நாள்:25.01.2025 இன் மூலம் பொதுமக்களும் குழப்பம் அடைந்து அவர்களின் சொத்துக்களை அவசர தேவைகளுக்கு கூட விற்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு இதன் காரணமாக பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் அசல் ஆவணங்களை தவறவிட்ட பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை பதிவு செய்ய இயலாததால் இதன் மூலம் பதிவுத்துறைக்கு வரும் வருவாயும் பெருமளவில் தடுக்கப்படுகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள் – சுற்றறிக்கை
ஆகவே பதிவுத் துறை தலைவர், மேற்கண்ட பொதுமக்களின் நலனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, பதிவுத் துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கிற பொது ஆவணங்களின் (PUBLIC DOCUMENT) அடிப்படையிலும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலும், அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும், பதிவுத் துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கிற பொது ஆவணங்களை (PUBLIC DOCUMENT) சரிபார்த்து பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுந்த வழிகாட்டி நெறிமுறைகளுடன் சுற்றறிக்கையினை வெளியிட்டு உதவிட வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
https://1xbet-az-casino2.com, https://mostbet-azerbaijan.xyz, https://mostbetcasinoz.com, https://mostbet-az24.com, https://mostbetsportuz.com, https://1xbetaz888.com, https://mostbetaz2.com, https://1winaz777.com, https://pinup-azerbaijan2.com, https://pinup-bet-aze1.com, https://vulkan-vegas-kasino.com, https://1xbet-az-casino.com, https://mostbet-uz-24.com, https://mostbet-oynash24.com, https://vulkan-vegas-spielen.com, https://pinup-az24.com, https://1xbetaz777.com, https://mostbet-qeydiyyat24.com, https://mostbettopz.com, https://mostbet-uzbekistons.com, https://1xbetcasinoz.com, https://mostbet-azerbaycanda24.com, https://mostbetaz777.com, https://vulkan-vegas-bonus.com, https://1xbet-azerbaycanda24.com, https://1win-az-777.com, https://vulkanvegas-bonus.com, https://1xbet-az24.com, https://1xbet-azerbaycanda.com, https://1xbetkz2.com, https://mostbetuztop.com, https://vulkan-vegas-888.com, https://1win-azerbaijan2.com, https://vulkanvegaskasino.com, https://1xbetaz3.com, https://pinup-azerbaycanda24.com, https://mostbetuzonline.com, https://vulkan-vegas-erfahrung.com, https://mostbet-az.xyz, https://1win-azerbaycanda24.com, https://1x-bet-top.com, https://1win-az24.com, https://mostbet-azerbaycan-24.com, https://mostbetsitez.com, https://mostbet-azerbaijan2.com, https://most-bet-top.com, https://1winaz888.com, https://pinup-qeydiyyat24.com, https://vulkanvegasde2.com, https://kingdom-con.com, https://1xbetsitez.com, https://pinup-bet-aze.com, https://mostbet-kirish777.com, https://1win-azerbaijan24.com, https://mostbetuzbekiston.com, https://1win-qeydiyyat24.com, https://vulkan-vegas-casino2.com, https://mostbet-azer.xyz, https://mostbet-royxatga-olish24.com, https://1xbetaz2.com, https://1xbet-azerbaijan2.com, https://mostbet-ozbekistonda.com, https://mostbet-azerbaycanda.com, https://vulkan-vegas-24.com, https://mostbet-az-24.com