Tamilnadu 3624 teachers recruitment 2020
தமிழ்நாட்டில் 3624 ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியீடு
பத்திரிக்கை செய்தி :
சென்னை பிப்ரவரி 01 அரசுப் பள்ளிகளில் நிலவும் 3624 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இருப்பினும் பொதுத்தேர்வுகள் வருவதால் குறைந்தபட்சம் ஓரிரு மாதங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும்படி கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் அந்தந்த பள்ளிகளே பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தொகுப்பூதிய அடிப்படியில் தற்காலிக ஆரிசியர்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 624 இடைநிலை ஆசியர்களை தொகுப்பூதிய அடிப்படியில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணை விவரம்: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 3624 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்கள் நலன்கருதி பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 3 மாதங்களுக்கு இபபணியிடங்களுக்கு ரூ.7,500/- தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி வழங்ககிக்கொரு தொடக்க கல்வி இயக்குநர் கோரியுள்ளார்.
ரூ.8.15 கோடி நிதி வழங்கப்படும் அதையேற்று பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக 3624 தமிழ்வழி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானர்வர்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படியில் நியமித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதற்கு தேவையான ரூ.8.15 கோடி நிதி இயக்குநரகத்துக்கு வழங்கப்படும். ஆசிரியர் நியமனம் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வண்ணம் நடைபெற வேண்டும் மேலும், தேர்வாகும் ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள் பணிநியமன ஆணை மற்றும் பணிச்சான்று வழங்கப்படக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி – 830, திருவண்ணாமலையில் – 578, விழுப்புரம் -416,வேலூர்-393 தருமபுரி-355, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
குறைந்தபட்சமாக கரூரில் ஒரு பணியிடமும், நாகப்பட்டினத்தில் 6 பணியிடங்களும் என 3624 இடங்கள் காலியாக உள்ளன. வருவதால் பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் தற்காலிக ஆசிரியர்கள் பணியில் இருப்பர். அதன்பிறகு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும் என கல்வித்துறை அத்திரிகாரிகள் தெரிவித்துள்ளனர். (source-தினமணி பத்திரிக்கை செய்தி )