GOVT JOBS

Tn Rural Development job And Panchayat Raj Recruitment 2025 Online Application At Tnrd Tn Govt jobs In 8 10th Pass Can Apply

66 / 100 SEO Score

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம் – முழு விவரம்
தமிழில் படிக்க எழுத தெரியுமா?, 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா?

Rural Development job And Panchayat Raj Recruitment 2025

தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் பல்வேறு பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் மாவட்ட வாரியாக உள்ள ஏராளமாக காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. ஊராட்சி ஒன்றிய அளவில் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிப்பம் பெறப்படுகிறது. தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள், 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு அதிகபடியாக ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.


TN Rural Development and Panchayat Raj
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2025(புகைப்படங்கள்- Samayam Tamil)

இப்பதவிகளுக்கான தகுதிகள், சம்பளம், விண்ணப்பிப்பது எப்படி ஆகிய விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

ஊராட்சித்துறை பணியில் விவரங்கள் 2025
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக இப்பதவிகள் நிரப்பப்படுகிறது. ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள காலிப்பணியிடங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
 
வயது வரம்பு
அனைத்து பதவிகளுக்கும் 01.07.2025 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர் ஆகிய பதவிகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பொது பிரிவினர் 32 வரையும், பிசி/எம்பிசி பிரிவினர் 34 வரையும் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வயது வரையும் இருக்கலாம்.
ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு 18 – 32 வரையும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 34 வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 42 வரையும் இருக்கலாம்.

கல்வித்தகுதி
அலுவலக உதவியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
பதிவறை எழுத்தர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இரவு காவலர் பதவிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
ஈப்பு காவலர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் பதவிக்கு நிலை 1 கீழ் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிவறை எழுத்தர் பதவிக்கு மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
இரவு காவலர் பதவிக்கு நிலை 1 கீழ் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு நிலை 8 கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

மாவட்ட விவரங்கள்
அரியலூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கருர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படுகிறது. மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்களை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிப்பது எப்படி?
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் காலியாக உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நேரடியாக ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.50 செலுத்த வேண்டும்.

கல்வித்தகுதி, வகுப்பு பிரிவு (சாதி சான்று) மற்றும் முன்னுரிமை கோருபவர்கள் அதற்கான சான்றிதழ்களை கட்டாயம் ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் செப்டம்பர் 2-ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியாக நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.

முக்கிய நாட்கள்
விவரம் தேதிகள்
அறிவிப்பு வெளியீடு 01.09.2025
ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் 02.09.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2025
ஊராட்சி ஒன்றியங்களில் அடிப்படையில் உங்கள் பகுதியில் இருக்கும் பணி விவரங்களை அறிந்துகொண்டு ஆன்லைன் வழியாக உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
https://1xbet-az-casino2.com, https://mostbet-azerbaijan.xyz, https://mostbetcasinoz.com, https://mostbet-az24.com, https://mostbetsportuz.com, https://1xbetaz888.com, https://mostbetaz2.com, https://1winaz777.com, https://pinup-azerbaijan2.com, https://pinup-bet-aze1.com, https://vulkan-vegas-kasino.com, https://1xbet-az-casino.com, https://mostbet-uz-24.com, https://mostbet-oynash24.com, https://vulkan-vegas-spielen.com, https://pinup-az24.com, https://1xbetaz777.com, https://mostbet-qeydiyyat24.com, https://mostbettopz.com, https://mostbet-uzbekistons.com, https://1xbetcasinoz.com, https://mostbet-azerbaycanda24.com, https://mostbetaz777.com, https://vulkan-vegas-bonus.com, https://1xbet-azerbaycanda24.com, https://1win-az-777.com, https://vulkanvegas-bonus.com, https://1xbet-az24.com, https://1xbet-azerbaycanda.com, https://1xbetkz2.com, https://mostbetuztop.com, https://vulkan-vegas-888.com, https://1win-azerbaijan2.com, https://vulkanvegaskasino.com, https://1xbetaz3.com, https://pinup-azerbaycanda24.com, https://mostbetuzonline.com, https://vulkan-vegas-erfahrung.com, https://mostbet-az.xyz, https://1win-azerbaycanda24.com, https://1x-bet-top.com, https://1win-az24.com, https://mostbet-azerbaycan-24.com, https://mostbetsitez.com, https://mostbet-azerbaijan2.com, https://most-bet-top.com, https://1winaz888.com, https://pinup-qeydiyyat24.com, https://vulkanvegasde2.com, https://kingdom-con.com, https://1xbetsitez.com, https://pinup-bet-aze.com, https://mostbet-kirish777.com, https://1win-azerbaijan24.com, https://mostbetuzbekiston.com, https://1win-qeydiyyat24.com, https://vulkan-vegas-casino2.com, https://mostbet-azer.xyz, https://mostbet-royxatga-olish24.com, https://1xbetaz2.com, https://1xbet-azerbaijan2.com, https://mostbet-ozbekistonda.com, https://mostbet-azerbaycanda.com, https://vulkan-vegas-24.com, https://mostbet-az-24.com