Gold Loan: கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் தங்க நகை அடகின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் பலர், மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் கூட்டுறவு வங்கிகளில் விவசாய பயிர்க்கடன் வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்கும் போது எல்லாம், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகிவிடுகிறது. ஏனெனில் கடந்த காலங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இப்போதும் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் பெற பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
பொதுவாகவே கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. பேரில், மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆகியவை தங்க நகைகளின் பெயரில் கடனுதவி வழங்கி வருகிறன்றன. விவசாய கடன் பெறும் விவசாயிகள், அதை ஒரு ஆண்டுக்குள் திருப்பி செலுத்திவிட்டால் வட்டி மானியம் வழங்கப்படுவதும் வழக்கம் ஆகும்.
இந்த ஒரு காரணத்திற்காகவே, கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வந்தார்கள். ஆனால் பொதுமக்கள் பலருமே விவசாய கடன் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஏனெனில் அடுத்த ஆண்டு (2026) தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ளதால், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாக உள்ளது. கடந்த காலங்களை போன்று இந்த முறையும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற பேச்சு மக்கள் மத்தியில் உள்ளது.
இதனால், கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் பெற பலரும் ஆர்வம் காட்டினர். கடந்த சில மாதங்களாக கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இந்தநிலையில் தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாய பயிர்க்கடன் வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது இதன் காரணமாக விவசாயிகள் கடன் பெற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, “வருகிற தேர்தலில் கூட்டுறவு கடன் தள்ளுபடியாகும் என்ற எதிர்பார்ப்பில் பலரும் வேறு வங்கிகளில் அடகு வைத்த நகைகளையும் திருப்பி கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்திருக்கிறார்கள். இதனால் விவசாயிகள் தற்போது கடன் பெற முடியாத நிலைமை ஏற்பட்டிருககிறது.. கூட்டுறவு வங்கிகளில் சென்று கேட்டால் கடன் இலக்கு எட்டப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள். எனவே, அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பயிர்க்கடன் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட அளவு கடன் வழங்க இலக்கு ஒதுக்கப்பட்டது. அந்த இலக்கு எட்டப்பட்டிருககிறது. அதற்கு மேல் கடனுதவி வழங்கினால் மத்திய, மாநில அரசு வழங்கும் வட்டி மானியம் பெற முடியாது. எனவே, கூடுதல் நிதி கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அரசு உத்தரவு வந்தவுடன் விவசாயிகளுக்கு தடையின்றி கடன் வழங்கப்படும் என்று கூறினார்கள்.