கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனாவின் லேசான அறிகுறி இருந்துள்ளது. இதனையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது வீட்டிலேயே தனிப்படுத்திக்கொண்டுள்ளார். எனினும் தனது குடும்பத்தில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.
Sachin Tendulkar (@sachin_rt) March 27, 2021
newstm.inDailyhunt