ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜூன் 1ஆம் தேதி முதல் 12 தேதி வரை பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்காக என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் டூ தேர்வை எழுதாத 36 ஆயிரத்து 842 மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும். 12 வகுப்பு தேர்வுக்கான மதிப்பீடு செய்வதற்கு 27 ஆம் தேதியிலிருந்து தொடங்கும். 11ஆம் வகுப்புக்கு நடைபெறாத தேர்வுகள் ஜூன் 2ஆம் தேதி நடைபெறுகின்றது என்று அமைச்சர் தெரிவித்தார்.