தெலுங்கானா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இருந்து வரக்கூடிய வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தற்போது எடுத்துள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பெரிய வெங்காயத்தை கட்டுப்படுத்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் நாளை முதல் பெரிய வெங்காயத்தை பசுமைப் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் மூலம் கிலோ 45 ரூபாய்க்கு விற்கப்படும் எனவும், நாளை மறுநாள் முதல் தமிழகம் முழுவதும் பசுமைப் பண்ணை கடைகளில் கிலோ 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 100 முதல் 110 வரையும், சிறிய வெங்காயத்தின் விலை 120 இல் இருந்து 130 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More
Tamil Nadu Land Survey and Land Records Department Recruitment 2026: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடும் 10ம் வகுப்பு… Read More
SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More
TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம்… Read More