Advertisement

Breaking News: சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு கடந்த ஒருவாரமாகவே சளி, இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்து வந்துள்ளது. நேற்று பாதிப்பு கொஞ்சம் அதிகமாக இருந்ததால் உடனடியாக சிறைத்துறை மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ரேபிட் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா இல்லை என்று தெரியவந்தது. இருப்பினும் சில மருத்துவர்கள் ஆர்.டி மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் எடுக்க பரிந்துரைத்ததால் அதுவும் எடுக்கப்பட்டது. இதனையடுத்து சிடி ஸ்கேனும் எடுக்கப்பட்டது.

இதனிடையே அவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதால் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு இன்று நடத்தப்பட்ட ஆர்டி பிசிஆர் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் விக்டோரியா மருத்துவமனையிலுள்ள கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டார்.

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் குறைந்தது 14 நாட்களாவது அவர் தனிமைப்படுத்தப்படுவார். எனவே அவரது விடுதலை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

6 days ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

6 days ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

7 days ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

4 weeks ago