தமிழகத்தில் ஏழை ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு அரசு சார்பாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம், 2022 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்த தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
இலவச திருமணம்:
தமிழகத்தில் ஏழை எளிய பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் திருமணம் செய்ய அரசு உதவி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆட்சி காலத்தில் 12ம் வகுப்பு முடிக்கப் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ. 25,000 வழங்கப்பட்டது. மேலும் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. அதே போல பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 50,000 ரொக்க பணமும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது ஏழை ஜோடிகளுக்கு அரசு இலவசமாக திருமணம் செய்து வைத்து வருகிறது.அதாவது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.
இதன் கீழ் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் இலவச திருமண திட்டத்தின் கீழ் மாற்று திறனாளிகளுக்கு திருமண பதிவு கட்டணம் கிடையாது என்று தெரிவித்தார். மேலும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த மே மாதம் சென்னை திரு.வி.க. நகரில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்
மேலும் மணமக்களுக்கு முதல்வர் அவர்கள் தங்கத் தாலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட 33 வகை சீர்வரிசை பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து தற்போது தமிழக கோவில்களில் ஏழை ஜோடிகளுக்கு அக்டோபர் மாதத்தில் இலவச திருமணம் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி ஒவ்வொரு மண்டலத்திலும் 25 ஏழை ஜோடிகளை தேர்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட திட்ட செலவின்படி திருமணம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மணமக்களின் விவரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மண்டல இணை ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Charity trust near me: Kanchipuram, tamilnadu, Ph :9087808501 CSR, NGO DERPAN, Form 80G Tax Free… Read More
Madras High Court has released the recruitment notification No: 72 / 2025 & 73 /… Read More
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு… Read More
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 1,300 ஊராட்சி செயலா் பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More
சென்னை: பதிவுத்துறையில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட பொது மக்களால் தொடுக்கப்பட்ட வழக்கில்… Read More
Bank Account பல போலி பரிவர்த்தனைகள் நடந்தால் அபராதம் விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியாது. ரூ.10,000 அபராதம்… Read More