Advertisement
Social Activity

தமிழகத்தில் அரசு சார்பில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் – முக்கிய தகவல் இதோ!

Advertisement

Advertisement

தமிழகத்தில் ஏழை ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு அரசு சார்பாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம், 2022 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்த தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

இலவச திருமணம்:
தமிழகத்தில் ஏழை எளிய பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் திருமணம் செய்ய அரசு உதவி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆட்சி காலத்தில் 12ம் வகுப்பு முடிக்கப் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ. 25,000 வழங்கப்பட்டது. மேலும் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. அதே போல பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ. 50,000 ரொக்க பணமும் ஒரு பவுன் தங்கமும் வழங்கப்பட்டது.

Advertisement

அதனை தொடர்ந்து தற்போது ஏழை ஜோடிகளுக்கு அரசு இலவசமாக திருமணம் செய்து வைத்து வருகிறது.அதாவது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.

இதன் கீழ் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் இலவச திருமண திட்டத்தின் கீழ் மாற்று திறனாளிகளுக்கு திருமண பதிவு கட்டணம் கிடையாது என்று தெரிவித்தார். மேலும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த மே மாதம் சென்னை திரு.வி.க. நகரில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்

Advertisement

மேலும் மணமக்களுக்கு முதல்வர் அவர்கள் தங்கத் தாலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட 33 வகை சீர்வரிசை பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து தற்போது தமிழக கோவில்களில் ஏழை ஜோடிகளுக்கு அக்டோபர் மாதத்தில் இலவச திருமணம் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி ஒவ்வொரு மண்டலத்திலும் 25 ஏழை ஜோடிகளை தேர்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட திட்ட செலவின்படி திருமணம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மணமக்களின் விவரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து மண்டல இணை ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

admin

Recent Posts

TN Cooperative Bank Recruitment 2023 | 2257 Assistant Posts | Salary Rs 47200 | Last Date – 01/12/23 | TN Cooperative Bank Jobs 2023 | Apply Jobs Online

Organization NameDistrict Cooperative Society LtdJob CategoryTamilnadu Govt JobsEmployment TypeRegular JobsTotal Vacancies2257Job LocationAll DistrictEligibilityAll Over TamilnaduStart… Read More

8 hours ago

கனமழை அலெர்ட்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ள நிலையில்… Read More

2 weeks ago

சென்னை விஜய்யின் நிலைமை.. ஒரே வாரத்துல தலைகீழா போச்சே.. சும்மா விட்ருமா மேலிடம்.. இப்ப பாருங்க.. என்னவாம்.

சென்னை: தளபதி 68 என்ற படத்தில், நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுவதால் ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார்கள்..… Read More

2 weeks ago

மூன்று நாட்களில் கார்த்தியின் ஜப்பான் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஜப்பான் கார்த்தியின் 25வது திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது ஜப்பான். முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு சற்று கலவையான… Read More

2 weeks ago

உலகக்கோப்பை – இது மட்டும் நடந்தால் பாகிஸ்தான் அணிக்கு ஜாக்பாட்.. இந்தியா நிலை என்ன?

பெங்களூர் : 2023 உலகக்கோப்பை தொடரில் அதிர்ஷ்டம் கிடைக்குமா? என பாகிஸ்தான் அணி ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறது.… Read More

3 weeks ago

ESIC MTS and Various Post Notification 2023 Tamil | 17710 Vacancy Out| Apply Online

ESIC MTS and Various Recruitment 2023 [Summary]Name of the Organization:Employee’s State Insurance Corporation (ESIC)Notification No: Post NameMTS… Read More

4 weeks ago