செங்கல்பட்டு அருகே காட்டுப்பாக்கத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம், 7 நாள் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சியை நடத்துகிறது. விஞ்ஞான முறையில் தேனீ வளர்த்து, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டும் யுக்திகள் இதில் கற்றுத்தரப்படும்.
தேன் உற்பத்தி சிறந்த லாபகரமான தொழில்
தேன் உற்பத்தி என்பது இயற்கையும் விவசாயத்தையும் நேரடியாக இணைக்கும் ஒரு லாபகரமான தொழில். குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரக்கூடிய இந்த துறையில், விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தேனீ வளர்ப்பு இன்று பலரின் வாழ்க்கையை மாற்றி வருகிறது. இதை தொழில்முறையாக கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு சிறந்த வாய்ப்பாக காட்டுப்பாக்கத்தில் நடைபெறும் 7 நாள் இலவச பயிற்சி முகாம் அமைந்துள்ளது.
தேதிய மறக்காதீங்க மக்களே
செங்கல்பட்டு அருகே செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையம், தேசிய தேனீ வாரியத்தின் நிதியுதவியுடன் இந்தப் பயிற்சியை நடத்துகிறது. டிசம்பர் 16 முதல் 22 வரை நடைபெறும் இந்த ஏழு நாள் பயிற்சியில், தேனீ வளர்ப்பில் அத்தியாவசியமான விஞ்ஞான தகவல்கள் மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கப்படுகின்றன.
எளிமையாகவும் பயனுள்ளதாகவும் கற்பிக்கப்படும்.
தேனீக்கு உணவு தரும் பயிர்களை எப்படி சாகுபடி செய்வது, தேனீ பெட்டிகள் மற்றும் பிற உபகரணங்களை எப்படி தயாரிப்பது, தேனீக்களை பாதுகாக்க வேண்டிய சூழல், அதிக தேன் உற்பத்தி பெறும் யுக்திகள் போன்ற பல தலைப்புகள் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் கற்பிக்கப்படும்.
விவசாயிகள் பங்கேற்பது சிறப்பு
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர், மற்றும் அனைத்து தரப்பு விவசாயிகளும் இந்த பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
பயிற்சி முற்றிலும் இலவசம்
இலவசமாக வழங்கப்படும் இந்த பயிற்சி, சிறு தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு பெரிய வாய்ப்பாக அமையும்.
தேனீ வளர்ப்புக்கு உழைப்பும் அறிவும்தான் தேவை
தேனீ வளர்ப்பு என்பது உழைப்பும் அறிவும்தான் தேவைப்படும் துறை சரியான பயிற்சி பெற்றால் தேன், மெழுகு, ப்ரோப்போலிஸ் போன்ற பல உற்பத்திகளின் மூலம் லட்சங்களில் வருமானம் ஈட்டுவது சாத்தியம்.
விவரம் தேவைக்கு அனுகவும்
தேனீ வளர்ப்பு குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் எனில் 99405 42371 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
குறைந்த முதலீட்டில் பெரிய லாபம் பெற முடியும்
இன்றைய சூழலில் இயற்கை சார்ந்த பொருட்களுக்கு பெரும் தேவை உள்ளது. அதில் முக்கியமானது தேன். விஞ்ஞான ரீதியாக தேனீ வளர்ப்பை கற்றுக்கொண்டால், குறைந்த முதலீட்டில் பெரிய லாபம் பெற முடியும்.
பயிற்சியை மிஸ் பண்ணாதீங்க
காட்டுப்பாக்கத்தில் நடைபெறும் இந்த 7 நாள் இலவச பயிற்சி, உங்கள் தொழில் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு அரிய சந்தர்ப்பம். இந்த பயிற்சியை மிஸ் பண்ணாதீங்க… உங்கள் எதிர்காலத்துக்கு இன்று ஒரு நல்ல முதலீடு செய்யுங்கள்
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக… Read More
We are hiring!!!!!!!! “Bharti Airtel Ltd” is hiring for below positions. It’s time to build… Read More
Free lpg connection : பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் கூடுதல் எல்பிஜி இணைப்புகளை வழங்க மத்திய… Read More
இந்த மடிக்கணினி வழங்கும் பணியை டிசம்பர் மாதம் தொடங்கி, டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்களில் 10 லட்சம்… Read More
கிராம உதவியாளர் தேர்வுக்கான tnrd hall ticket நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய, அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, உங்கள் விண்ணப்ப… Read More
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு கொடுக்கப்போகும் டிசம்பர் பரிசு. முழு விவரம் தமிழ்நாடு அரசு முன்னாள்… Read More