Gold Appraisal
சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியானது 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஐந்து நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந் நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,” இப்பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி பிளாட்டினம் ஆகிய உலேக தரம் அறிதல், உரைகள் பயன்படுத்தும் முறை கேரட் & கேரட் (Carat & Carat) தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை (Board rate) ஆசிட் பயன்படுத்துதல், எடை அளவு இணைப்பான், தங்கம் (999% 916%, 85%, 80%, 75%) தரம் அறிதல், ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறை, IS ரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள், ஹால் மார்க் தங்க அணிகலன்கள், ஆபரண வகைகள் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல் அதற்காண வழிமுறைகள் ஆகியன கற்றுத் தரப்படும்.
மேலும், இப்பயிற்சியில் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணி பற்றியும், அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவை குறித்த தகவல்களும் வழங்கப்படும்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் – 9360221280/9543773337
இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் (ஆண் / பெண்/திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/ திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல்,-600 032.
முன்பதிவு அவசியம் பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
Address full details:
Entrepreneurship Development and
Innovation Institute (EDII-TN)
Government of TamilNadu
No1. EDI Institute Road, SIDCO industrial Estate
Ekkaduthangal, Chennai -600032.
Website:www.editn.in
Youtube: www.youtube.com/@ediitn
Facebook: EDIITamilnadu
Twitter: edichennaitn
Contact : +91-044-22252081/82/83
email: dir@editn.in | Web: www.editn.in
Post Office RD 2025: The Post Office Recurring Deposit scheme continues to be one of… Read More
Gold Loan: கூட்டுறவு துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் தங்க நகை அடகின் பேரில் வழங்கப்பட்டு… Read More
'சென்யார்' புயல் கரையைக் கடக்கிறது: கனமழை காரணமாக தமிழக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை? ஐஎம்டியின் சமீபத்திய புதுப்பிப்பைப் பாருங்கள் Read More
When a superstar walks into politics, people usually expect big rallies and fiery speeches. Here,… Read More
மகிழ்ச்சி செய்தி! பொங்கல் பரிசு ரூ.2000 - முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு… Read More
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி… Read More