Kalaignar Magalir Urimai Thogai:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு கொடுக்கப்போகும் டிசம்பர் பரிசு. முழு விவரம்

தமிழ்நாடு அரசு முன்னாள் அரசு ஊழியர்களின் குடும்பத்தினரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் சேர அனுமதி அளித்துள்ளது. அதற்காக மகளிர் உரிமைத் திட்ட விதிமுறையிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, காலமுறை ஓய்வூதியம் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

அதாவது, ஓய்வூதியம் பெறுபவர்களை தவிர்த்து குடும்பத்தில் வேறு தகுதிவாய்ந்த பெண்கள் இருப்பின் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். ஓய்வூதியம் பெறுபவர்கள் பெண்களாக இருப்பின் அவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட கடைநிலை அரசு ஊழியர்களாக பணியாற்றியவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அதனை பரிசீலித்த தமிழ்நாடு அரசு இந்த விதிமுறையை சேர்த்துள்ளது.
அதேநேரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் பிற விதிமுறைகளையும் பூர்த்தி செய்பவர்களாக இருக்க வேண்டும். இதனால், தமிழ்நாடு முழுவதும் 2.5 லட்சத்துக்கும் குறைவான காலமுறை ஓய்வூதியம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்திருக்கின்றனர்.

அவர்களில் தகுதியானவர்களை தமிழ்நாடு அரசு இறுதி செய்து கொண்டிருக்கிறது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கட்டாயம் தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1000 கிடைக்கும்.
இது தொடர்பான அப்டேட் டிசம்பர் 2வது வாரத்தில் வர இருக்கிறது. ஏற்கனவே, தமிழ்நாட்டு பெண்கள், குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்தவர்கள் அரசின் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தகுதியான பெண்கள் யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு கவனமாக இருக்கிறது. அதேநேரத்தில், யாராவது எல்லா விதிமுறைகளையும் பூர்த்தி செய்தும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு கடந்த முறையைப் போலவே இம்முறையும் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தகுதியில்லாத பெண்கள் யாரேனும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இருந்தாலும் அவர்கள் குறித்து https://kmut.tn.gov.in/public_complaints.html என்ற லிங்கில் ஆன்லைனில் புகார் தெரிவிக்கலாம்.
உங்கள் புகாரை பரிசீலித்து, அதில் உண்மை இருப்பின் தமிழ்நாடு அரசு அந்த பயனாளியை இத்திட்டத்தில் இருந்து நீக்கிவிடும்.