சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFCs) Gold Loan Relief கடன் வசூல் நடைமுறைகள் நியாயமானதாகவும், மரியாதையானதாகவும், இரக்கமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்றும், ரிசர்வ் வங்கியின் (RBI) நியாயமான நடைமுறைக் குறியீட்டுடன் கண்டிப்பாக ஒத்துப்போக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நேற்று நடைபெற்ற NBFC கருத்தரங்கில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், NBFC-கள் குறிப்பாக சிறிய கடன் தொகைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கடுமையான வசூல் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும், வாடிக்கையாளர்களின் கண்ணியத்தின் முக்கியத்துவத்தை பாதுகாக்க வேண்டும். சில நேரங்களில் ஊடக அறிக்கைகள் ரூ.500 போன்ற மிகச் சிறிய கடன் தொகைகளுக்கு எடுக்கப்பட்ட கடுமையான மீட்பு நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகின்றன. அதை தவிர்க்க வேண்டும்.
Also You Know:
” உங்களிடம் ஒருவர் கடன் வாங்கி இருக்கிறார் என்றால் அவரிடம் கடன் தொகை வசூலிக்கும்போது நியாயமாக வசூலிக்கவும். அவரிடம் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டாம். மீடியாக்களில் நிறைய பரபரப்பு செய்திகளை பார்க்கிறேன். அது போல நடக்க கூடாது.
தங்கத்தை அடகு வைத்தவர்.. அதை திருப்பி மீட்காத பட்சத்தில் ஏலம் விடும்போது முறையாக ஆர்பிஐ விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டு உள்ளார். வங்கிகள் ஏலம் விடும்போது தங்கத்தை முறையாக ஏலம் விட வேண்டும். வங்கிகள் பொதுவாக ஆர்பிஐ விதிகளை பின்பற்றியே தங்கத்தை ஏலம் விடும். ஆனால் சில அடகு கடைகள் அப்படி செய்வது இல்லை.
வங்கி அல்லாத அடகு நிறுவனங்கள் சில விதிகளை பின்பற்றுவது இல்லை. அவைகள் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றாமல் தங்க நகைகளை ஏலம் விடுகின்றன. அடகு நிறுவனங்கள் இப்படி செய்வது தெரிந்தால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் (NBFCs) கடன் வசூல் நடைமுறைகள் நியாயமானதாகவும், மரியாதையானதாகவும், இரக்கமுள்ளதாகவும் இருக்க வேண்டும் , விதிமுறைகளை பின்பற்றி மட்டுமே நீங்கள் செயல்பட வேண்டும், என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
நிர்மலா சீதாராமன் பேச்சு (Gold Loan Relief):
மேலும்,வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் Scheduled Commercial Banks (SCBs) ஆகியவை ஒரே மாதிரியான விதிகளால் வழிநடத்தப்படுகின்றன. இவை ஆர்பிஐ கீழே வரவில்லை என்றாலும் ஏலம் விடுவதில் முறையாக ஆர்பிஐ விதிகளை கடைபிடிக்க வேண்டும். கடன் வாங்கியவர் தங்கக் கடனைச் செலுத்தத் தவறினால், NBFCகள் மற்றும் வங்கிகளால் தங்கத்தை ஏலம் விடுவதற்கு என்று முக்கியமான விதிகள், செயல்முறைகள் உள்ளன. இந்த செயல்முறைகளை NBFCகள் மற்றும் வங்கிகள் பின்பற்ற வேண்டும். இந்த செயல்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
பொதுவாக தங்கத்தை ஏலம் விடுவதற்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். பல முறை நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நகை கடன் வாங்கியவர் திருப்பிச் செலுத்த வரவில்லை என்றால், வங்கி அல்லது NBFC ஏலத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் அதை முறையாக வாடிக்கையாளரிடம் தெரிவிக்க வேண்டும். இந்த செயல்முறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
