வாழ்க்கை
இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் கி. பி. 675-ஆம் ஆண்டு மே 23ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை மாறன் பரமேசுவரன் என்கிற இளங்கோவதிராயர். கி. பி. 705-ஆம் ஆண்டில் தனது தந்தையின் பின் அரியணை ஏறினார். நந்திவர்ம பல்லவனுடன் சேர்ந்து பாண்டிய, சேர படைகளை எதிர்த்துப் பன்னிரண்டு போர்களில் போரிட்டுள்ளார்.நாலடியார் நூலில் இவரது மரபு வழி குறிப்பிடப்படுகிறது.இவர் தமிழ்ப் புலவர்கள் பலரை ஆதரித்துத் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரைப் புகழ்ந்து பாச்சில் வேள் நம்பன், ஆசாரியர் அநிருத்தர், கோட்டாற்று இளம்பெருமானார், குவாவங் காஞ்சன் என்போர் வெண்பாக்கள் பாடியுள்ளனர். அவை தஞ்சை மாவட்டத்தில் உள்ள செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தூண்களில் காணப்படும் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியதாகக் கருதப்படும் தமிழ்ச் சமண நீதி நூலான நாலடியாரில் முத்தரையரின் கொடைச் சிறப்பு பேசப்பட்டுள்ளது (பாடல் எண்கள் 200, 296).

போரில் எதிரிகளை வென்ற பன்னிரண்டு இடங்கள்
- கொடும்பாளுர்
- மணலூர்
- திங்களூர்
- காந்தலூர்
- அழுந்தியூர்
- காரை
- மரங்கூர்
- புகழி
- அண்ணல்வாயில்
- செம்பொன்மாரி
- வெண்கோடல்
- கண்ணனூர்
சிறப்புப்பெயர்கள்
- ஸ்ரீ சத்ரு மல்லன் (பகைவர்களை வென்றவன்)
- ஸ்ரீ கள்வர் கள்வன்
- ஸ்ரீ அதிசாகசன்
- ஸ்ரீ மாறன்
- அபிமான தீரன்
- சத்ரு கேசரி (பகைவர்களுக்கு சிங்கம்)
- தமராலயன்
- செரு மாறன்
- வேல் மாறன்
- சாத்தன் மாறன்
- தஞ்சைக் கோன்
- வல்லக் கோன்
- வான் மாறன்