Advertisement
Categories: Service

Post Office Grama Suraksha Yojana Offers Rs 35 Lakh Returns Check Here Details

ரூ. 35 லட்சம் வருமானம் தரும் சூப்பரான திட்டம்.. ரூ. 1500 முதலீடு செய்தால் போதும்!

இந்திய அஞ்சல் துறை அனைவருக்கு ஏற்ற பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் கிராமப்புற மக்களுக்காக பிரபலமானதாக கிராம சுரக்ஷா யோஜனா உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வது மற்றும் பலன்கள் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.

தபால் அலுவகலம் சேமிக்க விரும்புகிறவர்களுக்கு பலவிதமான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என அனைவருக்கு ஏற்ற விதமான திட்டங்கள் போஸ்ட் ஆபீஸில் உள்ளது. இதில் சரியான திட்டங்களை தேர்ந்தெடுத்து டெபாசிட் செய்யும் போது, முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தை பெறலாம்.

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் சேமிக்க விரும்பும் நிலையில், போஸ்ட் ஆபீஸில் நல்ல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. பாதுகாப்பான டெபாசிட், நல்ல வருமானம் தபால் அலுவலக திட்டங்களில் கிடைக்கும். அத்துடன் கூடுதல் சிறப்பாக போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் ரிஸ்க் கிடையாது. அஞ்சல் அலுவலத்தில் கிராப்புற மக்களுக்காக கிராம சுரக்ஷா யோஜனா திட்டம் உள்ளது.

போஸ்ட் ஆபீஸில் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாக கிராம சுரக்ஷா யோஜனா செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரத்யேகமாக கிராப்புற மக்களுக்காக இந்த திட்டம் உள்ளது. தினந்தோறும் 50 ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலமாக, மெச்சூரிட்டியாக ரூ. 35,00,000 தொகையை முதலீட்டாளர் பெறலாம்.

19 வயது முதல் 55 வயதான யாராக இருந்தாலும் கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையாக பத்தாயிரம் ரூபாயும், அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும் இந்த திட்டத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கிராம சுரக்ஷா யோஜனாவில் பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தில் தினமும் ஐம்பது ரூபாய் வீதம் மாதந்தோறும் ரூ.1,500 ஒருவர் டெபாசிட் செய்யும் போது ரூ. 35 லட்சம் வரை ரிட்டனாக பெறலாம். 55 ஆண்டுகளுக்கு என்றால் மாதம் ரூ.1,515 தொகையும், 58 ஆண்டுகளுக்கு 1,463 ரூபாய் மாதந்தோறும் முதலீட்டாளர் டெபாசிட் செய்யலாம். 60 ஆண்டுகளுக்கு ஒருவர் 1,411 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்.

கிராம் சுரக்ஷா யோஜனாவில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடன் பெரும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. பாலிசி துவங்கிய நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு சரண்டர் செய்யலாம். 5 வருடங்களுக்கு பிறகு போனஸ் தொகையும் இந்த திட்டத்தில் பெறலாம். கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் முதலீட்டாளர் 80 வயதை நிறைவு செய்யும் போது, மொத்த பாலிசி தொகையும் சரண்டர் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Share
Published by
admin

Recent Posts

PM SVANidhi : தெருவோர வியாபாரிகளுக்கு குட்நியூஸ்! பிஎம் ஸ்வாநிதி 2030 வரை நீட்டிப்பு

PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More

3 weeks ago

தங்கம் 7,500 முதல் 13,400 வரை: 2025-ல் தங்கம் எவ்வாறு கிட்டத்தட்ட 80 சதவீத வருமானத்தை வழங்கியது

சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More

4 weeks ago

சென்னையில் ரூ.6.73 லட்சத்துக்கு 1 BHK வீடு… தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு – யாரெல்லாம் பயன்பெறலாம்? Amazing announcement by the Tamil Nadu government – who can benefit?

சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More

4 weeks ago