தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது .
மேலும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு அவசரமாக பயணிக்க இ-பாஸ் கட்டாயம் எனவும் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு ஜூன் 14 காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், குற்றாலம், ஏற்காடு, ஏலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லத் தொடர்ந்து தடை நீட்டிக்கப்படுகிறது.ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் செல்ல இ.பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடம் இ-பாஸ் பெற்று பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் 10 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி
பொதுமக்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.