SBI வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2021 – 70 காலிப்பணியிடங்கள் !!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து அதன் கிளைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வங்கி பணி அறிவிப்பில் Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | SBI |
பணியின் பெயர் | Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery) |
பணியிடங்கள் | 70 |
கடைசி தேதி | 21.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
SBI வேலைவாய்ப்பு 2021 :
Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery) பணிகளுக்கு என 70 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவாளர்கள் 28.02.2021 அன்றிற்கு முன்னர் ஓய்வு பெற்றவராகவும் மேலும் 01.05.2021 தேதியில் 63 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
SBI கல்வித்தகுதி :
- வங்கி பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். பணியிடம் வழங்கப்படும் கிளைக்கு அருகில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- VRS ஓய்வு பெற்றவராகவோ அல்லது CBI/ Law Enforcement Agency நிறுவனங்களின் வழக்குகள் நிலுவை உள்ளவராகவோ இருக்க கூடாது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்டுவோர் போக்குவரத்துக்கான செலவுகளுடன் குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.41,000/- வரை சம்பளம் பெறுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனை 21.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.