இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் அதில் 50 முதல் 70 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லை என அரசு தரவுகள் கூறுகின்றன . கொரோனா பரவலை தடுக்க இந்தியா எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியது , குறிப்பாக மும்பை சென்னை கொல்கத்தா மற்றும் டில்லி உள்ளிட்ட அடர்த்தியான மக்கள் தொகை நகரங்களைக் கொண்ட இந்தியா எதிர்பார்த்ததைவிட அதிக நாட்கள் சமூக இடைவெளியையும் தனிமையையும் கடைபிடிக்க வேண்டியிருக்கும் . இதைச் செய்யாவிட்டால் அதிக நெரிசலான சென்னை, மும்பை போன்ற பகுதிகளில் வைரஸ் பரவலை தடுப்பது கடினம் என்று அவர் கூறினார் .
வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் நபருக்கு கொரோனா அறிகுறியே தெரியாது , ஆனால் அவரால் மற்றவர்களுக்கு நோய் பரவும் என நிபுணர்கள் நம்புகின்றனர் என கூறினார். இதற்கிடையில் பிரஞ்சு நிறுவனத்தால் உருவாக்கப்படும் சனோபியின் வைரஸ் தடுப்பூசியை முதலில் அமெரிக்கா பெறும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி பால் ஹட்சன் தெரிவித்துள்ளார் இதற்கு அவர் கூறும் காரணம் , சனோபியின்தடுப்பூசி ஆய்விற்கு அமெரிக்கா நிதி அளிப்பதில் முதலிடத்தில் உள்ளது தடுப்பூசி கண்டுபிடிப்பு நிறுவனங்களில் சனோபியின் ஒரு முக்கியமான வீரர் என வர்ணிக்கிறார் ஹட்சன், உலக அளவில் இரண்டு லட்சத்தில் 90 ஆயிரம் பேருக்கும் அதிகமான மக்களை கொன்ற ஒரு தொற்று நோய்க்கு எதிராக பாதுகாப்பை தேடுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடாவிட்டால் ஐரோப்பா இன்னும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்