தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு , அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கால்நடை பராமரிப்பு – 1
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.10,000 – 31,500
உதவி மின்பணியாளர் : 1
கல்வித்தகுதி : மின் அல்லது மின் கம்பிப் பணியாளர் தொழிற் பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும் H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.16,600 – 52,400
அலுவலக உதவியாளர் : 1
கல்வித்தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
கடைநிலை ஊழியர் : 2
கல்வித்தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
திருவிலகு : 2
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
காவலர் : 1
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
உதவி கைங்கர்யம் : 1
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் ஆகமப்பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,700 – 50,000
சன்னதி தீவட்டி : 1
கல்வித்தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் தீவட்டி பார்த்த அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.11,600 – 36,800
உதவி பரிச்சாரகர் : 1
கல்வித் தகுதி : தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.10,000 – 31,500
வயதுத் தகுதி : 01.04.2022 அன்று விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பம் மற்றும் நோட்டிபிகேஷன் பெற கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
https://parthasarathy.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=5
முகவரி: துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை – 5.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.05.2022 மாலை 5.45 மணி வரை
Notification Click here