சென்னை: தளபதி 68 என்ற படத்தில், நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுவதால் ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.. இந்நிலையில், நடிகர் விஜய்யின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கமானது, அரசியல் இயக்கமாக மாறி வருகிறது… அரசியலுக்கு வருவதாக விஜய் இதுவரை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும்கூட, அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்புகளை, ரசிகர்களிடம், பொதுமக்களிடம் அதிகரிக்க செய்துள்ளது.
Actor Vijay returns to Chennai from Thailand and What happened at the Chennai airport விரைவில் மாநாடு: நடக்க போகும் எம்பி தேர்தலில் விஜய் கவனம் செலுத்த போவதில்லை என்றும், சட்டமன்ற தேர்தலையே குறி வைத்துள்ளதால், வரும் 2026-ம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதன்காரணமாகவே, 2024 மே மாதத்திற்குள் வெங்கட்பிரபு உடனான படத்தை முடிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு பிறகு நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு, களப்பணிகளில் விஜய் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகின்றன.பாங்காக்: அந்தவகையில், விஜய்யின் 68வது திரைப்படம் தயாராகி வருகிறது.. இதன் முதற்கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில், 15 நாட்கள் இடைவேளைக்கு பிறகு, 2ம்கட்ட கட்ட படப்பிடிப்புக்காக, இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினர் கடந்த வாரம் பாங்காக் சென்றிருந்தனர். தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது..
எனவே, விஜய்யும் கடந்த 2ம்தேதி கிளம்பி சென்றார்.. இதற்காக, நடிகர் விஜய், பி.எம்.டபிள்யூ காரில், சென்னை ஏர்போர்ட்டில் வந்திறங்கினார். அப்போது, சென்னை விமானநிலையத்திற்கு விஜய் வந்தபோது, இசட் பிளஸ் பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அழைத்து சென்றனர்.. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.பாதுகாப்பு படை: விதிகளை மீறி நடந்ததாக மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.. இது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் கொண்டு சென்றனர்., இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு டெல்லியில் இருந்து சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இன்று விடிகாலையில், பாங்காக்கிலிருந்து சென்னை திரும்பினார் நடிகர் விஜய்.. அப்போது, விஜய்க்கு மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பு அளிக்கவில்லை.நிலைமை தலைகீழ்: ப்ளூ கலர் சட்டை, ப்ளூ கலர் மாஸ்க் அணிந்து வந்த விஜய்யை, பாதுகாப்பு போலீசார் பத்திரமாக, அவரது கார் வரை அழைத்து சென்றனர். தயாராக நின்று கொண்டிருந்த காரில் ஏறி விஜய் புறப்பட்டு சென்றார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவதுடன், ஒரே வாரத்தில் விஜய்யின் “செக்யூரிட்டி” நிலைமையும் தலைகீழாக மாறியுள்ளதும் கவனம் பெற்று வருகிறது.