GOVT JOBS

அரசு பள்ளிகளில் காலி பணியிடம்: விபரங்களை சேகரிக்க உத்தரவு

ஜூன் 1 நிலவரப்படி, அரசு பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் குறித்த விபரங்களை அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில், ஓய்வு பெறுவதால் ஏற்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை, பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்புவது வழக்கம். நடப்பு ஆண்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஓய்வு பெறும் வயது 59 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால், நடப்பு கல்வியாண்டில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. இருப்பினும், கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடம் குறித்த விபரங்களை, அறிக்கையாக சமர்ப்பிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், ஏற்கனவே பள்ளியில் உபரி பணியிடம் இருந்தாலோ, கூடுதல் பணியிடம் தேவைப்பட்டாலோ, அவற்றை காலிப்பணியிடமாக கருதக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில், நிர்வாகம் மற்றும் தோட்ட பராமரிப்பு பணியாளர் காலியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும், 37 ஆயிரம் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 24 ஆயிரம் தொடக்க பள்ளிகள், 7,000 நடுநிலை பள்ளிகள், 3,100 உயர்நிலை மற்றும் 3,050 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், 2.26 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பள்ளிகளின் நிர்வாக பணி, வளாக பராமரிப்பாளர், காவலாளி உள்ளிட்ட பதவிகளில், சில பள்ளிகளில் மட்டுமே ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


நிர்வாக பணி, எழுத்தர் போன்ற பணிகளுக்கு, ஆசிரியர்களே பயன்படுத்தப்படுகின்றனர். அதனால், பள்ளிகளில் ஆசிரியர்களின் வகுப்பு எடுப்பது பாதிக்கப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், அனைத்து பள்ளிகளிலும், நிர்வாக பணியாளர் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ஆட்களை நியமிக்க, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.


இதன்படி, பள்ளிகளில் பதிவு எழுத்தர், அலுவலக உதவியாளர், வளாக பராமரிப்பாளர், தோட்ட பராமரிப்பாளர், காவலாளி உள்ளிட்ட பதவிகளில், புதிய ஆட்களை நியமிக்க, பள்ளி கல்வித்துறைக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
https://1xbet-az-casino2.com, https://mostbet-azerbaijan.xyz, https://mostbetcasinoz.com, https://mostbet-az24.com, https://mostbetsportuz.com, https://1xbetaz888.com, https://mostbetaz2.com, https://1winaz777.com, https://pinup-azerbaijan2.com, https://pinup-bet-aze1.com, https://vulkan-vegas-kasino.com, https://1xbet-az-casino.com, https://mostbet-uz-24.com, https://mostbet-oynash24.com, https://vulkan-vegas-spielen.com, https://pinup-az24.com, https://1xbetaz777.com, https://mostbet-qeydiyyat24.com, https://mostbettopz.com, https://mostbet-uzbekistons.com, https://1xbetcasinoz.com, https://mostbet-azerbaycanda24.com, https://mostbetaz777.com, https://vulkan-vegas-bonus.com, https://1xbet-azerbaycanda24.com, https://1win-az-777.com, https://vulkanvegas-bonus.com, https://1xbet-az24.com, https://1xbet-azerbaycanda.com, https://1xbetkz2.com, https://mostbetuztop.com, https://vulkan-vegas-888.com, https://1win-azerbaijan2.com, https://vulkanvegaskasino.com, https://1xbetaz3.com, https://pinup-azerbaycanda24.com, https://mostbetuzonline.com, https://vulkan-vegas-erfahrung.com, https://mostbet-az.xyz, https://1win-azerbaycanda24.com, https://1x-bet-top.com, https://1win-az24.com, https://mostbet-azerbaycan-24.com, https://mostbetsitez.com, https://mostbet-azerbaijan2.com, https://most-bet-top.com, https://1winaz888.com, https://pinup-qeydiyyat24.com, https://vulkanvegasde2.com, https://kingdom-con.com, https://1xbetsitez.com, https://pinup-bet-aze.com, https://mostbet-kirish777.com, https://1win-azerbaijan24.com, https://mostbetuzbekiston.com, https://1win-qeydiyyat24.com, https://vulkan-vegas-casino2.com, https://mostbet-azer.xyz, https://mostbet-royxatga-olish24.com, https://1xbetaz2.com, https://1xbet-azerbaijan2.com, https://mostbet-ozbekistonda.com, https://mostbet-azerbaycanda.com, https://vulkan-vegas-24.com, https://mostbet-az-24.com