ஒருவருக்கு தலா ரூ.10 லட்சம் மானியம்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களையும்,சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒருவருக்கு தலா ரூ.10 லட்சம் மானியமாக வழங்க தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை 2018-2023 என்கிற புதிய கொள்கையை கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்தது. தமிழக அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு மானியம் வழங்குவது தான் முக்கிய நோக்கம் ஆகும்.
அந்த அடிப்படையில் 2021-ம் ஆண்டு புதிதாக தொழில் தொடங்கும் 10 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது என்றும் அதில் தெரிவித்துள்ளது.எனவே, புதிதாக தொழில் தொடங்குபவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மானியத்தை பெற வருகிற 25 ஆம் தேதிக்குள் http://startuptn.in/forms/tanseed/ என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.