இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மூன்றாவது நாளாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து கொரோனா வைரஸ் பொருளாதார பேக்கேஜ் திட்டங்களைப் பற்றிப் பேசினார்.
இன்றைய கூட்டத்தில் விவசாயிகள், பால் விவசாயிகள், மீனவர்கள், ஹெர்பல் தாவர வளர்ப்பு, குடிசைத் தொழில் என பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்.
இன்று நிதி அமைச்சர் பேசியவைகளை சுருக்கமாக, 6 தலைப்புகளில் பார்த்துவிடுவோம்.
ஹெர்பல் & தேனி வளர்ப்பு
![](https://infotelegraph.com/wp-content/uploads/2020/05/images-12.jpeg)
1. ஹெர்பல் தாவர சாகுபடியை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார்களாம்.
2. இதனால், லோக்கல் ஹெர்பல் தாவர விவசாயிகள் ரூ.5,000 கோடி வரை வருமானம் பார்க்கலாமாம்.
3. ஹெர்பல் தாவர வளர்புக்கு, கங்கை நதி அருகில் 800 ஹெக்டேர் நிலத்தை National Medicinal Plant Board-ன் கீழ் கொண்டு வருகிறார்களாம்.
4. ரூ.500 கோடியை தேனி வளர்ப்புக்கு செலவழிக்க இருக்கிறார்களாம். 2 லட்சம் தேனி வளர்ப்பவர்களின் வருமானத்தை அதிகரிப்பார்களாம்.
5. இந்த நிதி மூலம் தேனி வளர்ப்பு கட்டமைப்பு, கெபாசிட்டியை அதிகரிப்பு, மார்க்கெட்டிங், ஏற்றுமதி போன்றவைகளும் அடக்கமாம்.
கால்நடை
![](https://infotelegraph.com/wp-content/uploads/2020/05/download-4.jpeg)
1. National Animal Disease Program வழியாக ரூ.13,343 கோடி செலவழிக்க இருக்கிறார்களாம்.
2. அனைத்து கால்நடைகளுக்கும், கால் & வாய் வழியாக பரவும் நோய்கள் வராமல் இருக்க 100 % தடுப்பூசி உறுதி செய்யப்படுமாம்.
3. Animal Husbandry Infrastructure Development Fund வழியாக 15,000 கோடி ரூபாயை செலவழிக்க இருக்கிறார்களாம்.
4. Niche product-களை தயாரிக்கும் விதத்தில் நிறுவப்படும் ஆலைகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படுமாம்.
மீனவர்கள் & குடிசை தொழில்
![](https://infotelegraph.com/wp-content/uploads/2020/05/download-3.jpeg)
1. Pradhan Mantri Matsya Sampada Yojana திட்டத்தின் வழியாக ரூ.20,000 கோடி வழங்க இருக்கிறார்களாம்.
2. அதில் ரூ.11,000 கோடி கடல் & ஆற்று மீன் பிடித்தலுக்கு (Inland Fisheries) செலவழிக்க இருக்கிறார்களாம்.
3. ரூ.9,000 கோடி ரூபாய் கட்டமைப்புகளுக்கு வழங்க இருக்கிறார்களாம். சுமாராக 55 லட்சம் பேருக்கு வேலை கிடைக்குமாம்.
4. Micro Food Enterprises – MFEs-க்கு 10,000 கோடி ரூபாய் நிதி கொடுக்க இருக்கிறார்களாம்.
5. இதில் MFEs-களுக்கான பிராண்டிங், கெபாசிட்டியை அதிகப்படுத்துவது எல்லாம் அடக்கமாம்.
பால் விவசாயிகள்
![](https://infotelegraph.com/wp-content/uploads/2020/05/images-22-1.jpeg)
1. இந்த லாக் டவுன் காலத்தில், பாலுக்கான தேவை 20 – 25 % சரிந்து இருக்கிறதாம்.
2. இருப்பினும் கூட்டுறவு சங்கங்கள் நாள் ஒன்றுக்கு 5.6 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்யதிருக்கிறார்களாம். 3. உபரியாக 111 கோடி லிட்டர் பாலுக்கு 4,100 கோடி ரூபாய் பேமெண்ட் உறுதி செய்து இருக்கிறார்களாம்.
4. பால் கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய திட்டம் வழியாக, ஆண்டுக்கு 2% வட்டி மானியம் வழங்கப்படுமாம்.
5. முறையாக கடனைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு கூடுதலாக 2% வட்டி மானியம் வழங்கப்படுமாம்.
6. இதனால் சுமாராக 2 கோடி விவசாயிகளுக்கு, 5,000 கோடி ரூபாய் கூடுதலாக பணம் புழங்குமாம்.
ஆபரேஷன் க்ரீன் + விவசாயிகள்
![](https://infotelegraph.com/wp-content/uploads/2020/05/download-4.jpeg)
1. ஆபரேஷன் க்ரீன் வழியாக, கூடுதலாக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்க இருக்கிறார்களாம்.
2. இதன் கீழ் அனைத்து காய்கறி போக்குவரத்து & ஸ்டோரேஜ் செலவில் 50% மானியமாக கொடுக்கப்படுமாம்.
3. 6 மாதங்களுக்கு பைலைட் திட்டம் செயல்படுத்தப்படும். பைலைட் திட்டத்துக்குப் பின் எல்லோருக்கும் விரிவுபடுத்தப்படுமாம்.
4. விவசாயிகள் தங்கள் விளைச்சல்களை நல்ல விlaiக்கு விற்க ஒரு புதிய சட்டம் (Central Law) உருவாக்கப்படுமாம்.
5. இந்த சட்டத்தின் வழியாக, விவசாயி தன் பொருளுக்கு ஏற்ற விலையை தானே நிர்ணயித்து விற்றுக் கொள்ளலாம்.
6. அதோடு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து எளிமை படுத்தப்படுமாம். விவசாய பொருட்களுக்கான e-trading வரையறைகள் கொண்டு வரப்படுமாம்.
விவசாயிகள்
![](https://infotelegraph.com/wp-content/uploads/2020/05/download-3.jpeg)
1. விவசாயிகளுக்கு PM கிசான் திட்டத்தின் கீழ் ரூ.18,700 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறதாம். 2. PM ஃபசல் பீமா யோஜனா இன்சூரன்ஸ் திட்டம் வழியாக க்ளெய்ம் தொகை ரூ.6,400 கோடி வழங்கப்பட்டிருக்கிறதாம்.
3. மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு farm gate அடிப்படைக் கட்டமைப்புகளை அமைக்க இருக்கிறார்களாம்.
4. அதோடு முதல் நிலை விவசாய கூட்டுறவு சங்கங்கள் போன்றவைகளுக்கும் 1 லட்சம் கோடியில் இருந்து நிதி கொடுக்க இருக்கிறார்களாம்.
5. Essential Commodities Act (1955) என்று சொல்லப்படுகிற அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை அமல் படுத்த இருக்கிறார்களாம்.
6. இதனால் தானியங்கள் (Cereal), எண்ணெய், எண்ணெய் வித்துக்கள், உருளைக் கிழக்கு மற்றும் வெங்காயம் போன்றவைகள் Deregulate செய்யப்படுமாம்.
7. அதே போல மேலே சொன்ன பொருட்களை கையிருப்பு வைத்துக் கொள்வதிலும் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறதாம்.
![](https://infotelegraph.com/wp-content/uploads/2019/11/it_200x50.png)