ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் பொது ஊரடங்கு முடிவடைந்த பின்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வு அட்டவணை, தேர்வு தொடங்குவதற்கு 10 நாள்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ சமீபத்தில் கூறியிருந்தது.
இந்நிலையில், ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.