cinima news

சிறந்த 10 கிரைம் திரில்லர் படங்களின் லிஸ்ட்.. ஹாலிவுட் படங்களின் மத்தியில் முதலிடத்தை தட்டி தூக்கிய அருண் விஜய்

Top 10 Best Crime Thriller Movies:  கிரைம் திரில்லர் படங்களை வெறித்தனமாக பார்க்கக்கூடிய கூட்டமும் இருக்கிறது. அவர்களை எல்லாம் ஆரவாரப்படுத்திய டாப் 10 கிரைம் திரில்லர் படங்களின் லிஸ்ட் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகிறது. இதில் ஜித்து ஜோசப் திரைக்கதை எழுதி, இயக்கிய மலையாளத் திரைப்படமான திரிஷ்யம் தான், இதுவரை வெளியான டாப் 10 திரில்லர் படங்களில் 10-வது இடத்தை பிடித்துள்ளது.

மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், சைனீஸ் என பல மொழிகள் பேசி விட்டது. இதனால் அஜய் தேவ்கன், வெங்கடேஷ், கமலஹாசன் என பல முன்னணி நடிகர்கள் திரிஷ்யம் படத்தின் கதையை பிரதி எடுத்து வெற்றி பெற்று விட்டனர்.

இந்த படத்தில் சராசரி குடும்பத் தலைவர் தன்னுடைய மகள் மற்றும் மனைவி எதிர்பாராமல் செய்த கொலையை எப்படி போலீஸிடம் சிக்காமல் மறைக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் திரில்லர் ஸ்டோரி. இதன் தொடர்ச்சியாக 9-வது இடத்தில் 2009ம் ஆண்டு வெளியான  நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மேன் (No Country for Old Men) படமும், 8-வது இடத்தில் 1995ல் வெளியான ஹீட்(Heat ) என்ற திரில்லர் படமும், 7-வது இடத்தில் Memento என்ற படமும் உள்ளது.

Best Crime Thriller Movies-arun-vijay

இதுவரை வெளியான டாப் 10 கிரைம் திரில்லர் படங்களின் லிஸ்ட்

6-வது இடத்தில் Goodfellas படமும், 5-வது இடத்தில் Se7en என்ற படமும், அதன் தொடர்ச்சியாக 4-வது இடத்தில் 1983ல் வெளியான அதிரடி திரில்லர் படமான Scarface என்ற படமும் உள்ளது. 3-வது இடத்தில் 2023ல் வெளியான தி கில்லர் (The Killer) படமும் உள்ளது. மேலும் 2-வது இடத்தில் வெறித்தனமான கொலைகளை சித்தரித்து காண்பித்த Zodiac படம் உள்ளது. முதல் இடத்தை அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படம் தான் பிடித்துள்ளது. இதன் மூலம் இந்த படம் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய பெருமையை பெற்றுத் தந்துள்ளது.

இவ்வளவு ஹாலிவுட் படங்களின் மத்தியில் டாப் 10 கிரைம் திரில்லர் படத்தின் முதல் இடம் தடம் படத்திற்கு கிடைத்திருப்பது தற்போது சோசியல் மீடியாவில் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதோடு தடம் படத்தில் அருண் விஜய் டபுள் ஆக்ஷனில் மிரட்டினார். இதில் கதாநாயகன்கள் ஆன இரட்டையர்கள் கொலைகளை செய்துவிட்டு, இரட்டையர்களாக இருந்த காரணத்திற்காக அதிலிருந்து சாதுரியமாக எஸ்கேப் ஆகி விடுகின்றனர். ஆனால் அது எப்படி என்பதை இதில் செம திரில்லருடன் காட்டினர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
https://1xbet-az-casino2.com, https://mostbet-azerbaijan.xyz, https://mostbetcasinoz.com, https://mostbet-az24.com, https://mostbetsportuz.com, https://1xbetaz888.com, https://mostbetaz2.com, https://1winaz777.com, https://pinup-azerbaijan2.com, https://pinup-bet-aze1.com, https://vulkan-vegas-kasino.com, https://1xbet-az-casino.com, https://mostbet-uz-24.com, https://mostbet-oynash24.com, https://vulkan-vegas-spielen.com, https://pinup-az24.com, https://1xbetaz777.com, https://mostbet-qeydiyyat24.com, https://mostbettopz.com, https://mostbet-uzbekistons.com, https://1xbetcasinoz.com, https://mostbet-azerbaycanda24.com, https://mostbetaz777.com, https://vulkan-vegas-bonus.com, https://1xbet-azerbaycanda24.com, https://1win-az-777.com, https://vulkanvegas-bonus.com, https://1xbet-az24.com, https://1xbet-azerbaycanda.com, https://1xbetkz2.com, https://mostbetuztop.com, https://vulkan-vegas-888.com, https://1win-azerbaijan2.com, https://vulkanvegaskasino.com, https://1xbetaz3.com, https://pinup-azerbaycanda24.com, https://mostbetuzonline.com, https://vulkan-vegas-erfahrung.com, https://mostbet-az.xyz, https://1win-azerbaycanda24.com, https://1x-bet-top.com, https://1win-az24.com, https://mostbet-azerbaycan-24.com, https://mostbetsitez.com, https://mostbet-azerbaijan2.com, https://most-bet-top.com, https://1winaz888.com, https://pinup-qeydiyyat24.com, https://vulkanvegasde2.com, https://kingdom-con.com, https://1xbetsitez.com, https://pinup-bet-aze.com, https://mostbet-kirish777.com, https://1win-azerbaijan24.com, https://mostbetuzbekiston.com, https://1win-qeydiyyat24.com, https://vulkan-vegas-casino2.com, https://mostbet-azer.xyz, https://mostbet-royxatga-olish24.com, https://1xbetaz2.com, https://1xbet-azerbaijan2.com, https://mostbet-ozbekistonda.com, https://mostbet-azerbaycanda.com, https://vulkan-vegas-24.com, https://mostbet-az-24.com