சென்னை : சென்னை திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோவிலில் பல்வேறு காலிபணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 22.10.2021 மாலை 5மணிக்குள் விண்ணப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர்/செயல்அலுவலர், அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், சென்னை – 6000177/
அர்ச்சகர், ஓதுவார், தமிழ் புலவர், இளநிலை உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர், கடை நிலை ஊழியர் என மொத்தம் 22 பணியிடங்கள் காலியாக உள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியிடங்களுக்கும் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும சம்பள விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பினை முழுயைமாக பார்த்து அறிந்து கொள்ளவும்
சம்பளம்
இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 1
சம்பள விகிதம்: 18500-58600
கல்வி மற்றும் உரிய தகுதிகள் 10ம் வகுப்பு தேர்ச்சி, அல்லது அதற்கு மேல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தகுதி
ஓட்டுநர் : 1
சம்பள விகிதம்: 18500-58600
கல்வி தகுதி : 8ம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமமும், முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக் வேண்டும்.
கடை நிலை ஊழியர்: 4 பணியிடங்கள்
சம்பள விகிதம் : 15900-50400
கல்வி தகுதி: 8ம் வகுப்பு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
என்ன தகுதி
உதவி மின்பணி : 1 காலியிடம்
சம்பள விகிதம்: 16600-52400
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற ஐடிஐ நிறுவனங்களில் எலக்ட்ரிக்கல் அல்லது ஒயர்மேன் படிப்பில் சான்று பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரிக்கல் லைசன்சிங் போர்டலால் வழங்கப்பெறும் H சான்று பெற்றிருக்க வேண்டும்.
இரவு காவலர்
இதேபோல் அர்ச்சகர், தமிழ்புலவர், ஓதுவார், பரிச்சாரகர், பெருமாள் கோயில் மடப்பள்ளி, அம்மன் மடப்பள்ளி, தாளம், டமாரம், திருச்சின்னம், முடிகொட்டகை மேஸ்திரி, குழாய் பராமரிப்பாளர், இரவு காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கு உரிய தகுதியும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இணை ஆணையர்/செயல்அலுவலர், அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், சென்னை – 6000177 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். முழு விவரத்திற்கு செய்தியில் இணைக்கப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பை பார்க்கவும்,