ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே தர்பார் படத்தின் டப்பிங் பணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. இந்த நிலையில், ரஜினிகாந்த் டப்பிங் பேசி முடித்துள்ளதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் ’எனது வாழ்நாளில் நான் பார்த்த சிறந்த டப்பிங் செஷன் இது’ என குறிப்பிட்டு ரஜினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.