நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு உறுதியாக நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை முதல்வர் ஒப்புதலுடன் வெளியிடப்படும் என தெரிவித்தார். இந்தாண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக இருக்க வாய்ப்பில்லை, ஏற்கனவே இது குறித்து பேசிய போது முதல்வருடன் ஆலோசித்து இது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் இந்த அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளூர் படம் காவி நிறத்தில் இருந்த விவகாரத்தில் பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும், தவறுக்கு காரணமான பேராசிரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.