Uncategorized

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை மொத்தம் 5 பேருக்கு கொரோனா

இருந்து இதுவரை தமிழகம் வந்தவர்களில் மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இங்கிலாந்து நாட்டில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் இருந்து செல்லும் விமானங்களை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில், புதிதாக சென்னை, மதுரையைச் சேர்ந்த தலா ஒருவருக்கும், தஞ்சையைச் சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதாக தெரிவித்தார்.

அவர்களை தனி வார்டுகளில் வைத்து உயர்தர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர்களின் மாதிரிகளை புனே ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேருடனும் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா இல்லை என வந்துள்ளதாக ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். முன்னதாக ஏற்கெனவே ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
https://1xbet-az-casino2.com, https://mostbet-azerbaijan.xyz, https://mostbetcasinoz.com, https://mostbet-az24.com, https://mostbetsportuz.com, https://1xbetaz888.com, https://mostbetaz2.com, https://1winaz777.com, https://pinup-azerbaijan2.com, https://pinup-bet-aze1.com, https://vulkan-vegas-kasino.com, https://1xbet-az-casino.com, https://mostbet-uz-24.com, https://mostbet-oynash24.com, https://vulkan-vegas-spielen.com, https://pinup-az24.com, https://1xbetaz777.com, https://mostbet-qeydiyyat24.com, https://mostbettopz.com, https://mostbet-uzbekistons.com, https://1xbetcasinoz.com, https://mostbet-azerbaycanda24.com, https://mostbetaz777.com, https://vulkan-vegas-bonus.com, https://1xbet-azerbaycanda24.com, https://1win-az-777.com, https://vulkanvegas-bonus.com, https://1xbet-az24.com, https://1xbet-azerbaycanda.com, https://1xbetkz2.com, https://mostbetuztop.com, https://vulkan-vegas-888.com, https://1win-azerbaijan2.com, https://vulkanvegaskasino.com, https://1xbetaz3.com, https://pinup-azerbaycanda24.com, https://mostbetuzonline.com, https://vulkan-vegas-erfahrung.com, https://mostbet-az.xyz, https://1win-azerbaycanda24.com, https://1x-bet-top.com, https://1win-az24.com, https://mostbet-azerbaycan-24.com, https://mostbetsitez.com, https://mostbet-azerbaijan2.com, https://most-bet-top.com, https://1winaz888.com, https://pinup-qeydiyyat24.com, https://vulkanvegasde2.com, https://kingdom-con.com, https://1xbetsitez.com, https://pinup-bet-aze.com, https://mostbet-kirish777.com, https://1win-azerbaijan24.com, https://mostbetuzbekiston.com, https://1win-qeydiyyat24.com, https://vulkan-vegas-casino2.com, https://mostbet-azer.xyz, https://mostbet-royxatga-olish24.com, https://1xbetaz2.com, https://1xbet-azerbaijan2.com, https://mostbet-ozbekistonda.com, https://mostbet-azerbaycanda.com, https://vulkan-vegas-24.com, https://mostbet-az-24.com