கொரோனா வைரஸ் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா , இத்தாலி , போன்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இதுவரை இந்தியாவிலும் இதன் பாதிப்பு 85 ஆயிரத்தை கடந்து விட்டது.
இதற்கு தடுப்பூசி கண்டு பிடிக்க பல உலகநாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வரிசையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
பிரிட்டன் அரசும் மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கியுள்ளது.இந்த பல்கலைக்கழகம் சமீபத்தில் கண்டுபிடித்த தடுப்பூசியை குரங்குகளுக்கு செலுத்தி சோதித்தது. அதில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் எந்த எதிர்மறையான விளைவுகளும் ஏற்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது , கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட 6 குரங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில், அந்த குரங்குகள் முழு குணமடைந்தது தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி துறை பேராசிரியை சாரா கில்பர்ட் கூறுகையில் , தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசியில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்றார். இங்கிலாந்தில் மனிதர்களுக்கு தடுப்பூசி செலுத்தி பார்த்து அதன் முடிவுகளின் அடிப்படையில் அடுத்த மாதத்திற்குள் தடுப்பூசி கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
