ஏழை கர்ப்பிணிகளுக்கு 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மத்திய அரசின் தாய்மை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏழை எளிய பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு சத்தான உணவுகளை உட்கொள்வது என்பது மிகவும் முக்கியமாக உள்ளது. அதனால் மத்திய அரசு சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. பிரதமரின் தாய்மை வந்தன திட்டம் என்பது பெண்களுக்கு பேறுகால பயன்தரும் திட்டமாக உள்ளது. 2013ம் ஆண்டு உணவு உறுதிப்பாடு சட்டத்தின்படி நம் அனைத்து மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்பட்டு வந்தது. இதன்மூலம் பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணை மூலம் 5000 வழங்கப்பட்டு வந்தது.
குழந்தை பிறந்து சில காலம் கழித்து இறந்து விட்டால், ஒரே ஒரு முறை பயன்பெறும் விதத்தில் ஏதாவது தவணைகள் பாக்கி இருந்தால் அடுத்த குழந்தை பிறப்பதில் மூலம் நிறைவேற்றப்படும்.
மத்திய அரசு மூன்று தவணைகளில் மொத்தம் 5,000 வழங்குகிறது. கருவுற்ற பெண்கள் அங்கன்வாடி மையம் அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதனை பதிவு செய்து கொண்டால் முதல் தவணையாக 1000 வழங்கப்படும்.
கருவுற்ற காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பரிசோதனைகளில் குறைந்தது ஒரு பரிசோதனை அவரது செய்திருக்கவேண்டும். ஆறாவது மாதத்தில் இரண்டாவது தவணையாக 2 ஆயிரம் வழங்கப்படும். அதன் பிறகு தடுப்பு ஊசி போட்ட பிறகு உதவித்தொகையின் மூன்றாவது தவணை 2 ஆயிரம் வழங்கப்படும். பிரதமரின் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். கர்ப்பிணி பெண்கள் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று பெயரை பதிவு செய்து இத்திட்டத்தின் மூலம் உதவிதொகையை பெற்றுக் கொள்ளலாம்.