முக கவசம் அணிந்ததே ஒரு இளைஞரை தற்போது உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளியுள்ளது.
சீனாவை சேர்ந்த சாங் எனும் 36 வயது இளைஞர் கடந்த 9ம் தேதி முக கவசம் அணிந்து ஜாகிங் செய்ய சென்றுள்ளார். அவர் முக கவசம் அணிந்திருந்தால் ஓட துவங்கிய சில மணி துளிகளிலேயே மூச்சு விட சிரமப்பட்டுள்ளார். இருந்த அதை பொருட்படுத்தாமல் ஜாகிங்கை தொடர்ந்துள்ளார். எப்போதும் 4 கிலோமீட்டர் வரை ஓடுபவர் அன்று 6 கிலோ மீட்டர் ஓடியுள்ளார். அதன் பின்னர் வீட்டை சென்றடைந்தவர் நெஞ்சு வலி ஏறபட, அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு விரைந்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது நுரையீரல் கடும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவர் சென் பாவ்ஜன், அவர் முககவசம் அணிந்து ஓட்டத்தை மேற்கொண்டதால், அவரது நுரையீரலுக்குள் சரியாக ஆக்சிஜன் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நுரையீரல் அவர் இதயத்தின் மீது பாரத்தைப் போட்டதால் அவர் பாதித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாதித்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவித்துள்ள மருத்துவர் உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்ச்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் போது முக கவசம் அணிவது உயிருக்கு ஆபத்தாக அமையும் என எச்சரித்துள்ளார்.