கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கியுள்ள நிலையில் ஹரியானா மாநிலம், பஞ்குலா பகுதியை சேர்ந்த போலீசார் ஒரு முதியவரின் வீட்டின் முன் நின்று வீட்டில் இருந்த முதியவரை வெளியே அழைக்கின்றனர்.
அவர் வெளியே வந்ததும் உங்கள் பெயர் என்ன என போலீசார் கேட்க, அதற்கு கரண் புரி எனவும், நான் இங்கே தனியாக வசித்து வருவதாகவும் போலீசாரிடம் கூறிக்கொண்ட வெளியே வருகிறார். உடனே தங்கள் கையில் இருந்த கேக்கை நீட்டி போலீசார் அந்த முதியவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகின்றனர்.
இதனை சற்றும் எதிர்பாராத அந்த முதியவர் போலீசாரின் அன்பில் நெகிழ்ந்து கண்ணீர் சிந்துகிறார். இதுகுறித்து கூறியுள்ள போலீசார், அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதாகவும், தங்கள் தந்தை தனியாக இருக்கிறார்.