நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு டிசம்பர் 14 ஆம் தேதி மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட நிலையில் அங்கு 4 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ரஜினி கொரோனா இல்லை என் முடிவு வந்தாலும் அவர் ஐதராபாத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ரஜினிகாந்துக்கு கொரோனா இல்லை. ஆனால் இரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருக்கிறது. இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரஜினி தனது அரசியல் கட்சி தொடர்பாக ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டார். அவரை மருத்துவர்கள் கொரோனா காரணமாக ஏற்கனவே எச்சரித்ததாக அவர் கூறிய நிலையில் பொது கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதேசமயம் ரஜினிக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.