Social Activity

அடுத்த 10 நாட்களில் கொரோனா தொற்று இல்லாத சென்னை..!! ஒரே முடிவுடன் மாநகரத்தை ரவுண்டடிக்கும் ராதாகிருஷ்ணன்..!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரியும் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையருமான ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர்  மூலிகை கஷாயத்தை  வழங்கினார் . தமிழக முதலமைச்சர் அவர்கள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பகுதி வாரியாக திட்டமிட்டு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளார்.  அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் வைரஸ் தொற்று அதிகம் பாதித்த ராயபுரம் மண்டலம் கோடம்பாக்கம் மண்டலம், திருவிக நகர் மண்டலம் ஆகிய பகுதிகளில் பகுதி வாரி திட்டமிடல் செயல்படுத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் மண்டலத்தில் இந்திய மருத்துவ துறையினருடன் இணைந்து முழுமையாக தொற்று  இல்லாத பகுதியாக மாற்றும் வகையில் வார்டு 127 சீமாத்தம்மன் கோயில் தெருவில் சிறப்பு அதிகாரி வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்களும் இன்று பொதுமக்களுக்கு மூலிகை கஷாயத்தை வழங்கினர் . 

Image

தொடர்ந்து பொதுமக்களுக்கு ஆட்டோக்கள் மூலம் கபசுரக் குடிநீர் மற்றும் மூலிகை கசாயம் வழங்கும் பணியினை துவக்கி வைத்தனர் , இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் அறிவுரையின்படி கொரோனா வைரஸ்  கட்டுப்படுத்த பகுதி வாரியாக திட்டமிடப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இந்த அதிரடி நடவடிக்கைகளின் மூலம் நோய் பாதித்த பகுதிகளில் நல்ல பலன் கிடைத்துள்ளது .ஏற்கனவே சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள கண்ணகி நகர் எழில் நகர் மற்றும் சுனாமி நகர் ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் பகுதி திட்டமிடல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாநகராட்சி ஆணையருடன்  இணைந்து நேற்றைய தினம் ஆய்வு நடத்தப்பட்டது .    பகுதி திட்டமிடலில் வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியுடன் இருத்தல் மற்றும் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுதல் போன்ற எளிய நடைமுறைகளின் மூலம் இந்த வைரஸ் தொற்றை தடுக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது . 

Image

மேலும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்திய மருத்துவர் துறையினருடன் இணைந்து கபசுரக் குடிநீர் மூலிகை கஷாயம் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன .சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 34 ஆயிரம் பணியாளர்களுக்கு ஏற்கனவே கபசுர குடிநீர் தொடர்ந்து 10 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .  தற்போது வைரஸ் தொற்று அதிகம் பாதித்துள்ள கோடம்பாக்கம் மண்டலத்தில் பகுதி வாரி திட்டமிடல் பணி துவங்கப்பட்டுள்ளது .  குறிப்பாக மண்டலத்திலுள்ள  127-இல் மட்டும் 152 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது .  எனவே இந்த பகுதியில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்த 100%  தொற்று இல்லாத பகுதியாக மாற்றவும் பகுதி வாரி திட்டமிடலில் இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கபசுர குடிநீர் மற்றும் மூலிகைக் கஷாயங்கள் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது .  கபசுர குடிநீர் மற்றும் மூலிகை கஷாயம் தொடர்ந்து 10 நாட்களுக்கு அனைவருக்கும் வழங்கப்படும்

Image

இந்த மூலிகை கஷாயத்தில் சித்த மருத்துவத்துறை வல்லுநர்களின் அறிவுரை படி , சுக்கு 100 கிராம் ,  மிளகு 5 கிராம் ,  திப்பிலி 5 கிராம் , சிற்றரத்தை 30 கிராம் ,  அதிமதுரம் 100 கிராம் ,  ஓமம் 5 கிராம் ,  கிராம்பு 5 கிராம் ,  கடுக்காய்த்தோல் 50 கிராம் ,   மஞ்சள் 10 கிராம் சேர்த்து அரைத்து அதில் 10 கிராம் அளவு பொடியை 400 மில்லி லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து 100 மில்லி லிட்டர் அளவுக்கு கொதித்த பின்னர் வெதுவெதுப்பான நிலையில் பருகவேண்டும்.  இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வைரஸ் தொற்றின் வீரியம் பெரும் அளவு குறைக்கப்படும் என சித்த மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கோடம்பாக்கம் மண்டலத்தில் இந்திய மருத்துவத் துறையின் சார்பில் 15 மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர் இந்தப் பணிகளின் முக்கிய நோக்கம் அடுத்த பத்து நாட்களில் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட வில்லை என நிலையை உருவாக்குவதே  ஆகும். கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மண்டலமாக மாற்றுவதே ஆகும் .  கபசுர குடிநீர் மற்றும் மூலிகை கஷாயம் ஆகியவற்றை போலியாக தயாரித்து விற்பனை செய்யும் நபர்கள் மீது இந்திய மருத்துவத்துறையின் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளதுடன் ,  அரசின் இந்த முயற்சிகளுக்கு பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.  

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top