அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மரணம் குறித்து விசாரணை செய்யப்படும் என்று மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரும், அஇஅதிமுக மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களுக்கு அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேட்டியளித்தார். அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து தெளிவாக கூறிவிட்டார்.
கருணாநிதியின் உடல் நிலை சரியில்லாத போதும் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று தவறான ஆலோசனை கூறிய ஸ்டாலின், தனது சுயலாபத்திற்காக அவரை தேர்தலில் நிற்க வைத்துள்ளார்.
எனவே, கருணாநிதியின் மரணத்திற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம் என்று அவரே வெளிப்படையாக கூறியுள்ளார் என தெரிவித்தார்.
தொடர்ந்து, “2021ல் அதிமுக ஆட்சி அமைத்தவுடன் கருணாநிதி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், அதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றார் மேலும், திமுகவில் சீட் கிடைக்காதவர்கள் எல்லாரும் மு.க.அழகிரி பக்கம் வந்து விடுவார்கள் என்றும் ராஜன் செல்லப்பா கூறினார்.