Uncategorized

இந்த வாரம் வெளியேற்றப்படுகிறாரா சுரேஷ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைவான வாக்குகள் பெற்றவர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது

இந்த வாரம் ஏற்கனவே அர்ச்சனா, ஆரி, சனம், பாலாஜி, சோம் சேகர், சுரேஷ் மற்றும் அனிதா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் நாளை ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போது வந்துள்ள தகவலின்படி இதுவரை பதிவான வாக்குகளில் குறைவான வாக்குகளை பெற்றவர் சுரேஷ் சக்கரவர்த்தி என்று கூறப்படுகிறது. எனவே சுரேஷ் சக்ரவர்த்தி இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது ஆனால் அதே நேரத்தில் அவர் கண்டெண்ட் கொடுக்கும் ஒரு போட்டியாளர் என்பதால் சீக்ரெட் அறையில் வைக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

ஆரம்பத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி அனைத்து போட்டியாளர்களுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தார். அவரது விளையாட்டு தந்திரத்தை ரம்யா தவிர கிட்டத்தட்ட யாருமே புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக அவருடைய பெர்மார்மன்ஸ் வெகுவாக குறைந்துள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் அர்ச்சனாவுக்கு வரவுக்கு பின் சுரேஷ் அமைதியாகிவிட்டார்.

இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் சுரேஷ் தவிர மற்ற அனைவருமே நன்றாக விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top