Social Activity

ஊரடங்கு நீட்டிப்பு… மேலும் ஒரு நிவாரண நிதி அறிவிப்பு

தமிழக முதல்வர் நேற்றைய தினம் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பல்வேறு கேள்விகளை எழுப்பினர் அதில் மேலும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுமா என்று கேட்டார்கள்.

அதற்கு தமிழக முதல்வர் அளித்த பதில் பார்த்தீர்கள்

கேள்வி: முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு 3,280 கோடி ஒதுக்கீடு நிவாரணப் பணி செய்து கொண்டு இருக்கிறது. இரண்டாம் கட்டமாக ஒரு நிவாரணத்தொகை அறிவிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பதில்: ஏற்கனவே என்னென்ன வாரியத்துக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தேன். இப்போது என்னென்ன வாரி அமைப்புகளுக்கு அந்த வாரியத்தில் உள்ள ஏழை தொழிலாளர்கள் அரசு உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிடுகிறேன்.

தூய்மைப் பணியாளர் நல வாரியம்,
கதிர் கிராம தொழில் நல வாரியம்,
மீனவர் நல வாரியம், மூன்றாம் பாலின நல வாரியம், பழங்குடியினர் நல வாரியம், சிறு வியாபாரி நலவாரியம், பூசாரிகள் நல வாரியம், உலக மாக்கள் நல வாரியம், நாட்டுப்புறக் கலைஞர் நல வாரியம், சிறு மரபினர் நல வாரியம், நரிக்குறவர் நல வாரியம், திரைப்பட தொழிலாளர் நல வாரியம் என இந்த வாரியங்களில் 7 லட்ச நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த 7 லட்சம் பேருக்கும் தலா ஆயிரம் வழங்கப்படும்.

அதேபோல தமிழ்நாடு முழுவதும் 1370 பட்டாசு தொழிற்சாலைகளில் இ.எஸ.ஐ திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 200 தொழிலாளர் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு தலா ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இது இரண்டையும் சேர்த்து தலா 8 லட்சத்து 20 ஆயிரத்து 200 தொழிலாளர்கள் இருக்கின்றன. இந்த தொழிலாளர்கள் என்பது 82.02 கோடி உதவித்தொகை வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுமா?
நோயின் தாக்கத்தைப் பொறுத்து தான் முடிவு எடுக்கப்படும் நாளுக்குநாள் இது தொற்று நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறேன் இதையெல்லம் ஆராய்வதுதான் அரசு முடிவு செய்யும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top