Social Activity

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் பிளாட்டினா அஷ்யூர் || SBI Life smart platina assure Best Scheme

மேலும் தகவல்: Mail Id : tnjobdec2018@gmail.com

சிறப்பம்சங்கள் 

  • உத்திரவாதமான லாபத்துடன் ஆயுள் காப்பீட்டைப் பெறுதல்
  • ஒவ்வொரு பாலிசி ஆண்டின் இறுதியில் 5.50% முதல் 6.00% வரை உத்திரவாதமான கூடுதல்கள்^
  • 6 அல்லது 7 ஆண்டுகளுக்கு செலுத்தவும் மற்றும் முறையே பாலிசி காலவரை 12 அல்லது 15 ஆண்டுகளுக்கு முழுமையான பலனை அனுபவியுங்கள்
  • வசதிக்கு ஏற்ப மாதாந்திரம் அல்லது வருடாந்திர செலுத்தத்திற்கான விருப்பத்தேர்வுfrequency,
  • வருமான வரிச் சட்டம், 1961 கீழ் நிலவும் விதிமுறைகள் படி  வரிச் சலுகைகள்

*வருமான வரிச் சட்டங்களின் படி வரிச் சலுகைகள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவையாகும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள். 

நன்மைகள்

பாதுகாப்பு

  • நிதிசார் பாதுகாப்பு ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்பு நிகழ்ந்துவிடும் பட்சத்தில் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கிறது

இணக்கத்தன்மை 

  • கூட்டப்பட்ட வசதிக்காக மாதாந்திரம் அல்லது வருடாந்திர செலுத்தத்திற்கான விருப்பத்தேர்வு

எளிமை 

  • தொல்லையற்ற காப்பீட்டிற்காக எளிமையான ஆன்லைன் விண்ணப்ப செய்முறையை உங்களுக்கு வழங்குகிறது

நம்பகத்தன்மை 

  • ஒவ்வொரு பாலிசி ஆண்டின் இறுதியில் வருடாந்திர பிரீமியத்தின் மீதான அடிப்படையில் உத்திரவாதமான கூடுதல்கள்^

உத்திரவாதமான கூடுதல்கள்  

உத்திரவாதமான கூடுதல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி அமலில் உள்ள பாலிசிகளுக்காக ஒவ்வொரு பாலிசி ஆண்டின் இறுதியில் வருடாந்திர பிரீமியங்கள் ^^ மீதான அடிப்படையில் காப்பீட்டு தொகை மீது தனி வட்டி விகிதத்தில் சேர்க்கப்படும். 

உத்திரவாதமான கூடுதல் தொகை = உத்திரவாதமான கூடுதல்களின் விகிதம் x பொருந்தும் வரிகள் நீங்கலாக  ஒன்றுசேர்ந்த செலுத்திய பிரீமியங்கள், தவணைமுறை பிரீமியத்திற்காக ஏற்படக்கூடிய கூடுதல் பிரீமியம்கள் மற்றும் செலவுகள்.

வருடாந்திர பிரீமியம் ரூ.1,00,000 விட குறைவு வருடாந்திர பிரீமியம் ரூ.1,00,000 க்கு சமமானது அல்லது அதைவிட அதிகம்
5.50% 6.00%

வருடாந்திர பிரீமியம் பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்டது, பொருந்தும் வரிகள், அண்டர்ரைட்டிங் கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாடல் பிரீமியத்திற்கான கட்டணம் ஏதேனும் இருப்பின், நீங்கலாக.

திட்ட பலன்கள்

முதிர்வுநிலை பலன் (அமலில் உள்ள பாலிசிகளுக்காக):

முதிர்வுநிலையில் உத்திரவாதமான காப்பீட்டுத் தொகை அத்துடன் பொருந்தும் படிக்கு திரண்டுள்ள உத்திரவாதமான கூடுதல்கள்

இறப்பு பலன் (அமலில் உள்ள பாலிசிகளுக்காக) :

துரதிர்ஷ்டவசமாக ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்பு நிகழ்ந்துவிடும் பட்சத்தில், இறப்பு பேரிலான காப்பீட்டுத் தொகை அத்துடன் திரண்டுள்ள உத்திரவாதமான கூடுதல்கள், ஏதேனும் இருப்பின், பயனாளிக்கு செலுத்தத்தக்கதாகும்.

இறப்பு  பேரிலான காப்பீட்டுத் தொகை முதிர்வுநிலையில் உத்திரவாதமான காப்பீட்டுத் தொகையை விட அதிகமாக இருப்பின் அல்லது வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியங்களின் 10 மடங்கு* அல்லது இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களின் 105%.

*வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாலிசி ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியம், பொருந்தும் வரிகள் நீங்கலாக தவணைமுறை பிரீமியத்திற்காக ஏற்படக்கூடிய கூடுதல் பிரீமியம்கள் மற்றும் செலவுகள் ஏதேனும் இருப்பின் அதைத் தவிர்த்து.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top