Social Activity

ஏடிஎம் கார்டு வைத்துள்ளார்கள் இதை பார்க்கவும்

Website Link: Click Here

ஆன்லைன் மற்றும் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு செலுத்துதல்களை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியாக, இந்திய ரிசர்வ் வங்கி, நாளை (அக்டோபர் 1, 2020) முதல் நடைமுறைக்கு வரும் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மேலும் டிஜிட்டல் பாதையில் இந்தியா வேகமாக முன்னேறும் போது, அந்த அமைப்பு முழுமையாக பாதுகாப்பாகவும் வசதியாகவும் பல்வேறு வசதிகள் செய்யப்படுகிறது.

அதன்படி ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வரும்போது என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்ன என்பதைப் பார்ப்போம்.

  • புதிய விதிகளின்படி, உங்கள் டெபிட், கிரெடிக் கார்டுகளின் பயன்பாட்டிற்கான புதிய தேர்வுகள் உங்களுக்கு கிடைக்கும். விருப்பத்தேர்வுகள் அல்லது விலகல் சேவைகள் (opt-in or opt-out) நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
  • இதன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள் மற்றும் பிற சேவைகளை, உங்கள் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்ய முடியும்.
  • அதாவது, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள் உள்நாட்டு ஏடிஎம்கள் மற்றும் பாயிண்ட் ஆஃப் சேல் டெர்மினல்களில் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும்.
  • டெபிட் மற்றும் கிரெடிட் இரண்டிலும் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பரிவர்த்தனை வரம்பை அமைக்க புதிய வசதி இருக்கும்.
  • ஏடிஎம், பிஓஎஸ், ஈ-காமர்ஸ் அல்லது என்எப்சி போன்ற கிரெடிட் டெபிட் கார்டுகளில் ஒரு குறிப்பிட்ட சேவையை அனுமதிக்கவோ அல்லது அதனை மறுக்கவோ விருப்பம் இருக்கும்.
  • அனைத்து வங்கிகளும், கார்டு வழங்கும் நிறுவனங்களும் ஆன்லைனில் அல்லது இந்தியா அல்லது வெளிநாடுகளில் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளுக்கு, ஒருபோதும் பயன்படுத்தப்படாத அனைத்து டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான ஆன்லைன் கட்டணத்தை முடக்குமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளன.
  • பயனர்கள் இப்போது NFC அம்சத்தையும் இயக்க அல்லது முடக்க முடியும்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top